முடி உதிர்தலுக்கு மூலிகைகள்: நம்மை சுற்றீ இருக்கும் மூலிகைகளை கொண்டே வைத்தியம் பார்த்துகொள்வது போல், அழகு பராமரிப்பும் மேற்கொள்ள முடியும். குறிப்பாக இயற்கை முறையில் பக்கவிளைவில்லாமல் முடி பராமரிப்பை மேற்கொள்ளவிரும்புபவர்களுக்கு இந்த மூலிகைகள் சிறப்பாக கைகொடுக்கும். மாசு மற்றும் ரசாயனங்களின் பயன்பாடு கூந்தலை வலுவிழக்கச் செய்யும். எனவே சில வீட்டு வைத்தியங்கள் முடி உதிர்தலில் இருந்து விடுபட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கற்றாழை
முடி உதிர்வைத் தடுப்பதில் கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் இருப்பதால் இவை முடியை வலிமையாக்கும். 


எப்படி பயன்படுத்துவது: ஹேர் வாஷ் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் கற்றாழை ஜெல்லை முடியில் தடவி, நன்றாக மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முடியை வலுப்படுத்துவதோடு, பளபளப்பாகவும் அழகாகவும் மாறும்.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?


நெல்லிக்காய்
நெல்லிக்காய் முடிக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை முடியை வேர்களில் இருந்து வலுப்படுத்துகிறது. 


எப்படி பயன்படுத்துவது: நெல்லிக்காய் எண்ணெய் அல்லது சாறு கொண்டு முடியை மசாஜ் செய்வது முடி உதிர்தலில் இருந்து விடுபடலாம். அதேபோல் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் முடி வலுவடையும்.


செம்பருத்தி
செம்பருத்திப் பூவைப் பயன்படுத்துவது முடி உதிர்வதைத் தடுக்கும். இதனால் முடி உதிர்வு நீங்கும். 


எப்படி பயன்படுத்துவது: செம்பருத்தி பூவை தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயுடன் சூடுபடுத்தி மசாஜ் செய்யவும். இல்லையெனில் செம்பருத்திப் பூக்களை மருதாணியுடன் சேர்த்துப் பூசுவதும் பலன் தரும். இது தலைமுடிக்கு சிறந்த பளபளப்பைக் கொடுக்கும்.


ரோஸ்மேரி
ரோஸ்மேரி ஒரு மணம் கொண்ட தாவரமாகும். இது மசாலாப் பொருளாகப் பயன்படுகிறது. ரோஸ்மேரியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. 


எப்படி பயன்படுத்துவது: ரோஸ்மேரி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது முடி உதிர்வை பெருமளவு நிறுத்தும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து சோர்வை நீக்கும் ‘சில’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ