தலைமுடியை செழித்து வளரச் செய்ய நெல்லிக்காய் + வெந்தயம் வெற்றிக் கூட்டணி

Hair Care: உணவாக உட்கொள்வதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய், அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 2, 2022, 01:34 PM IST
  • நெல்லிக்காயுடன் ஜோடி சேர்ந்து முடியை வளர்க்கும் வெந்தயம்
  • உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் நெல்லிக்காய்
  • தலைமுடியை செழித்து வளரச் செய்ய நெல்லிக்காய் + வெந்தயம் வெற்றிக் கூட்டணி
தலைமுடியை செழித்து வளரச் செய்ய நெல்லிக்காய் + வெந்தயம் வெற்றிக் கூட்டணி title=

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் அது ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக உள்ளது. நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம், அல்லது சமைத்தும் சாப்பிடலாம், ஊறுகாயாக நீண்ட நாள் வைத்தும் சாப்பிடலாம், தேனில் ஊறவைத்து மொரப்பா என்ற வடிவிலும் சாப்பிடலாம். பதப்படுத்தினாலும், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி குறைவதில்லை என்பது இதன் சிறப்பு. உணவாக உட்கொள்வதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய், அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

நெல்லிக் காயில் உள்ள விட்டமின் சி, உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கக்கூடியது. சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

 உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய், நரை முடியை தடுக்கும் ஆற்றலையும் உடலுக்கு வழங்குகிறது. நரை முடி ஏற்படுவதை தடுக்கும் நெல்லிக்காய், உருவான நரைமுடியையும் கருமையாக்கும் சாயப்பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய், முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் அருமருந்து ஆகும்.

மேலும் படிக்க  | காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யும் அநெல்லிக்காய். ஹீமோகுளொபின் உருவாக்கத்திற்கு அருமருந்தாய் செயல்படுகிறது.

சுலபமாக கிடைப்பதால் நெல்லிக்காயின் அருமை பெருமை தெரிவதில்லை, ஆனால், அதையே கடையில் வேறு விதமாக மாற்றி விற்பனை செய்யும்போது அதிக பணம் கொடுத்தும் வாங்கிப் பயன்படுத்துகிறோம்.  

நெல்லிக்காயுடன் கூட்டு சேர்ந்தால் வெந்தயமும் சூப்பர் பலன்களைத் தரும். அதில் ஒன்று தலைமுடி வளர்ச்சி என்பது உங்களுக்குத் தெரியுமா?நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் வெந்தயத்தில் உள்ள பல்வேறு ஆண்டி ஆக்சிடண்ட்கள் முடியை செழிப்பாக வளரச் செய்கின்றன. 

மேலும் படிக்க | வெள்ளை முடியை கருமையாக்க இந்த மரத்தின் இலைகளை பயன்படுத்துங்க

முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். எண்ணெய் 250 மில்லி லிட்டர், நெல்லிக்காய் 5 எண்ணிக்கை, இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்துக் கொள்ளவும்.

வெந்தயத்தை மிக்சியில் அடித்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். நெல்லிக்காயை நறுக்கி சிறு துண்டுகளாக வைத்துக் கொள்ளவும். நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். எண்ணெய் சூடேறும்போது அதில் நெல்லிக்காய் துண்டுகளை சேர்க்கவும்.

எண்ணெய் நன்றாக கொதித்த பிறகு, அதில் வெந்தயத் தூளை சேர்க்கவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, எண்ணெய்க் கலவையை நன்றாக ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய், தலைமுடியை நன்றாக வளரச் செய்வதோடு, கருப்பான முடியை நரையாக மாற்ற அனுமதிக்காது.

மேலும் படிக்க | தினமும் பீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? பீரின் பக்கவிளைவுகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News