நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?

பேரிச்சம்பழம் இரத்த குளுக்கோஸ், கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின், லிப்பிட் ப்ரொஃபைல் மற்றும் உடல் எடை ஆகியவற்றில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.    

Written by - RK Spark | Last Updated : Feb 2, 2023, 06:11 AM IST
  • பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
  • பேரீட்ச்சம்பழம் பழம் கிளைசீமியா மற்றும் எடையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.
  • பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் வயிறு நிறைவான உணர்வு ஏற்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?

பொதுவாக டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கிற கருத்து இருந்து வருகிறது.  ஆனால் சமீபத்திய ஆய்வுகளின்படி, பேரிச்சம் பழங்களை சாப்பிடுவது இரத்த குளுக்கோஸ், கொழுப்பு, உடல் எடை அல்லது இரத்த அழுத்தம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.  சரியான வகையான பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுக்கலாம்.  பேரிச்சம்பழம் இரத்த குளுக்கோஸ், கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின், லிப்பிட் ப்ரொஃபைல் மற்றும் உடல் எடை ஆகியவற்றில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.  பேரீச்சம்பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) 42.8 முதல் 74.6 வரை இருக்கும் மற்றும் கிளைசெமிக் சுமை (ஜிஎல்) 8.5-24 வரை இருக்கும்.  பேரீட்ச்சம்பழம் பழம் கிளைசீமியா மற்றும் எடையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.  

மேலும் படிக்க | சுகர் லெவலை குறைக்கனுமா? அப்போ இந்த பொருட்களை யூஸ் பண்ணுங்க

குளுக்கோஸ் ஸ்பைக்குகளுடன் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தாத சாதகமான குறியீடுகளைத் தவிர, பேரீச்சம்பழங்களில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.  பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் வயிறு நிறைவான உணர்வு ஏற்படுகிறது, பசியை தாமதப்படுத்துகிறது மற்றும் சர்க்கரை நுகர்வை குறைக்கிறது.  நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழங்களை மிதமான அளவில் சாப்பிட வேண்டும், நீங்கள் சாப்பிடும் மற்ற வகையான ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து பேரீச்சம்பழங்களையும் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.  சவூதி அரேபியாவில் 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ரூடாப் மற்றும் டேமரை ஒரு வருடத்திற்கு சாப்பிட்டு வருபவர்களிடம் இரத்த சர்க்கரை மற்றும் HbA1c அளவுகள் குறைவது கண்டறியப்பட்டது. 

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் அறிவிப்பின்படி, 100 கிராம் பேரீச்சம்பழத்தில் 311 கலோரிகள், 9 கிராம் நார்ச்சத்து, 1 முதல் 3 கிராம் புரதம் மற்றும் செலினியம், மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பேட் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  உலர்ந்த அடர் பழுப்பு பேரிச்சம்பழங்கள் இரத்த சோகைக்கு நல்லது, ஏனெனில் 100 கிராம் பேரீச்சம்பழத்திற்கு 4.70 மி.கி. இரும்புசத்து உள்ளது.  பேரீச்சம்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அதாவது ஃபிளாவனாய்டுகள், பினாலிக் அமிலங்கள், ஐசோஃப்ளேவோன்கள், குர்குமின், ஐசோதியோசயனேட்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளது.

மேலும் படிக்க | Heart Health: இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ‘சில’ பழங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News