Cholesterol Control Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, பலருக்கு உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமானால், அதனால் பல வகையான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. அதிகரித்த கொலஸ்ட்ரால் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவற்றுக்கு நுழைவாயிலாக அமைகின்றது. இது இதய நோய்க்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவரது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் குறைபாடு ஏற்பட்டு, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது அதிக கொலஸ்ட்ரால் (High Cholesterol) எனப்படும். சமீப காலங்களில் இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஆகியவர்களுக்கு இடையிலும் மாரடைப்பு அதிகரித்து வருவதை காண்கிறோம். இதற்கு முக்கிய காரணங்களில் கொலஸ்ட்ராலும் ஒன்று. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை பின்பற்றாத அனைவருக்கும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படலாம். எனினும், சிலருக்கு உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகமாக உள்ளது. அந்த நபர்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


இந்த நபர்களுக்கு அதிக கொலஸ்ட்ராலுக்கான ஆபத்து அதிகம்


உடல் பருமன்: உடல் எடை அதிகமாக (Obesity) இருந்து, பிஎம்ஐ 30க்கு மேல் உள்ளவர்கள் அதிக கொலஸ்ட்ரால் அபாயத்தில் உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். இடுப்பின் அளவு 34க்கு மேல் உள்ளவர்கள் மிக விரைவாக அதிக கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், எடை அதிகரிப்பதை குறைப்பதும், தொப்பை கொழுப்பு மற்றும் இடுப்பு கொழுப்பை குறைப்பதும் மிக அவசியமாகும்.


ஆரோக்கியமற்ற உணவு: அதிக அளவு டிரான்ஸ் கொழுப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்ளும் நபர்கள் உயர் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி கொண்ட உணவுகளை (Fatty Food) அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவை உயர் கொலஸ்ட்ரால் அபாயத்தை அதிகரிக்கின்றன. 


மேலும் படிக்க | சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை... யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது!


உடற்பயிற்சி செய்யாதவர்கள்: போதுமான உடல் உழைப்பு இல்லாதவர்கள், உடற்பயிற்சி (Exercise) செய்யாதவர்கள், ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்கள் என இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இது தவிர இதனால் வேறு பல நோய்களின் ஆபத்தும் அதிகரிக்கிறது.


மதுபானம்: அதிக அளவில் மது (Alcohol) அருந்தும் நபர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. மதுபானம் அருந்துவது மொத்த கொழுப்பின் அளவையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.


புகைபிடித்தல்: புகைபிடித்தல் (Smoking) இன்று பொதுவான விஷயமாகிவிட்டது. ஆனால், இது இது உடல் ஆரோக்கியத்தில் பல வித எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இந்த பழக்கம் மனிதர்களை அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களுக்கு பலியாக்குகிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. புகைபிடித்தல் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆரோக்கியமான வழியில் உடல் எடையை வேகமாய் குறைக்க உதவும் பழங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ