சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை... யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது!

Symptoms of High Uric Acid: உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால், சிறுநீரில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 17, 2024, 09:34 AM IST
  • உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், சிறுநீரின் நிறம் அடர் நிறமாக மாறும்.
  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உணர்வு எற்பட்டால், அது யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
  • சிறுநீரில் நுரை இருப்பது அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை... யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது!

Symptoms of High Uric Acid: இந்த அவசர காலத்தில் மனிதர்களை பாதிக்கும் வாழ்க்கை முறை நோய்களில் அதிக யூரிக் அமில பிரச்சனையும் ஒன்றாகும். சமீப காலங்களில் இது பரவலாக பலரிடம் காணப்படுகின்றது. சில உணவுகள் மற்றும் இறந்த உயிரணுக்களில் காணப்படும் பியூரின்களை உடல் உடைக்கும்போது உருவாக்கப்படும் ஒரு கழிவுப் பொருள்தான் யூரிக் அமிலம். யூரிக் அமிலத்தின் பெரும்பகுதி இரத்தத்தில் கரைந்துவிடுகிறது. மீதமுள்ளவை சிறுநீரகங்களுக்குச் சென்று உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

சில சமயம், சில காரணங்களால் உடலால் யூரிக் அமிலத்தை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது ஒரு பொதுவான நிலை. பலருக்கு இது ஏற்படக்கூடும். ஆனால், யூரிக் அமில அளவு மிகவும் அதிகமானால், அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக, மூட்டு வலி, சிறுநீரக கல் பிரச்சனை என பல வித பிரச்சனைகள் ஏற்படலாம். 

யூரிக் அமில அளவு அதிகமானால், உடல் நமக்கு சில அறிகுறிகளை காட்டும். இவற்றின் புரிதல் மிக அவசியமாகும். இதன் மூலம் இதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தி எந்த வித உடல் உபாதைகளும் ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்ளலாம். இதற்கு அதன் அறிகுறிகளை அடையாளம் காண்பது மிக முக்கியம். இந்த பிரச்சனை நீண்ட காலத்திற்கு புறக்கணிப்பதால் மூட்டுவலி மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால், சிறுநீரில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | ஆரோக்கியமான வழியில் உடல் எடையை வேகமாய் குறைக்க உதவும் பழங்கள்

சிறுநீரில் தெரியும் யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் 

- ஆரோக்கியமான நபரின் சிறுநீரில் ஒரு சாதாரண வாசம் இருக்கும். அது ஃப்ளஷ் செய்தவுடன் போய்விடும். ஆனால் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் சிறுநீரில் கடுமையான வாசம் ஏற்படும். இந்த அறிகுறி நீரிழிவு நோயிலும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், சிறுநீரின் நிறம் அடர் நிறமாக மாறும். ஆரோக்கியமான நபரின் சிறுநீர் பொதுவாக மஞ்சள் நிறமாக இருக்கும், ஆனால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்திருந்தால், அதன் நிறம் அடர் மஞ்சள் அல்லது அடர் பழுப்பு நிறமாக மாறும். நீரிழப்பு மற்றும் சிறுநீரக நோய் காரணமாகவும் இப்படி நிறம் மாறலாம்.

- சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உணர்வு எற்பட்டால், அது யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டாலும் அல்லது சிறுநீரக கற்கள் காரணமாகவும் இந்த உணர்வு ஏற்படக்கூடும்.

- சிறுநீரில் நுரை இருப்பது அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறியாக இருக்கக்கூடும். சிறுநீரகங்களால் உடலில் இருந்து நச்சுகளை சரியாக அகற்ற முடியவில்லை என்பதையும், அதிகப்படியான புரதம் அதில் குவிந்து கிடப்பதையும் சிறுநீரில் உள்ள நுரை குறிக்கிறது.

- யூரிக் அமிலம் அதிகரித்தால், சிறுநீரின் அளவு குறைவதைக் காணலாம். வழக்கத்தை விட குறைவாக சிறுநீர் கழித்தால், அதை ஒரு எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக்கொள்வது நல்லது. இது சிறுநீரகத்தின் செயல்பாட்டில் உள்ள தடையைக் குறிக்கிறது. இதன் காரணமாக யூரிக் அமிலம் சரியாக வெளியேற முடியாமல் போகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News