பூண்டு நல்லது தான்.. ஆனால் இந்த பக்கவிளைவு உண்டாம்.. எச்சரிக்கை
Side Effects Of Garlic: பூண்டு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற உணவாக உலகம் முழுவதும் பிரபலமான ஒரு மூலிகையாகும். ஆனால் பூண்டு சாப்பிடுவதை யார் யார் தவிர்க்க வேண்டும் என்பதை இன்று நாம் இந்த பதிவில் காண உள்ளோம்.
பூண்டின் பக்க விளைவுகள்: பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் பூண்டு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற உணவாக உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு மூலிகையாகும். ஆம், மிகப்பெரிய நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆனால் பல நன்மைகள் இருந்தாலும், சிலருக்கு பூண்டு தீங்கு விளைவிக்கும். சில நோய்களில் பூண்டை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த நபர்கள் பூண்டை சாப்பிடக்கூடாது என்பதை இன்று நாம் இந்த பதிவில் காண உள்ளோம்.
இந்த நபர்கள் பூண்டு சாப்பிடக்கூடாது
நீரிழிவு நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இதை அதிகமாக சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும், அதனால் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க | மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ‘கார்டிசோல்’ ஹார்மோன் அளவை குறைக்கும் செடிகள்!
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
கல்லீரல், குடல் அல்லது வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை சாப்பிடக்கூடாது. ஏனென்றால், நீங்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பூண்டில் உள்ள சில கூறுகள் கல்லீரலைக் குணப்படுத்த கொடுக்கப்பட்ட மருந்துகளுடன் வினைபுரிகின்றன, இதன் காரணமாக பிரச்சனை அதிகரிக்கும்.
சமீபத்தில் அறுவை சிகிச்சை ஆனவர்கள்
அறுவை சிகிச்சை செய்தவர்கள் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பூண்டு இயற்கையான இரத்தத்தை மெலிக்கும் தன்மை கொண்டது, அதாவது இரத்தத்தை மெல்லியதாக மாற்றும், எனவே சமீபத்தில் ஆபரேஷன் செய்தவர்கள் இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ