Side Effects of Mushroom: நாம் பல வித உணவுகளை உட்கொள்கிறோம். இவற்றில் சில உணவுகள் நமக்கு மிகவும் பிடித்தவையாக இருக்கின்றன. சில உணவுகளை அவற்றின் ஆரோக்கிய பண்புகளுக்காக உட்கொள்கிறோம். ஆனால் சில உணவுகள் சுவையோடு இருப்பதோடு இவற்றில் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காளானும் அப்படிப்பட்ட ஒரு உணவு தான். இதன் சுவை பலருக்கு மிகவும் பிடிக்கும். இதன் சுவை காரணமாக பலர் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் விலை அதிகமாக இருந்தாலும் இது உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை அளிப்பதால் இதை மக்கள் வாங்குகிறார்கள். இதில் உடலுக்கு தேவையான பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


அவ்வப்போது டயட்டில் காளான் உட்கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் பி, வைட்டமின் டி, பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, செலினியம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கின்றன. காளான்கள், குறைவான கொழுப்பு மற்றும் குறைவான கலோரி கொண்ட உணவாகும். வைட்டமின் டி சத்து நிறைந்துள்ள காளான், எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. காளான் புரதச்சத்து நிறைந்த உணவு என்பதால், உடல் எடையை குறைக்கவும் மிகவும் உதவுகிறது. சந்தைகளில் பலவித காளான்கள் கிடைக்கின்றன. இவற்றில் சில வகைகளால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பும் ஏற்படலாம்.


நம்மில் பலருக்கு நல்ல காளானுக்கும் கெட்ட விளைவுகளை அளிக்கும் காளானுக்கும் இடையிலான வித்தியாசம் தெரிவதில்லை. ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் சில காளான் வகைகளால் உடலுக்கு பல பக்க விளைவுகளும் ஏற்படுவதாக கூறுகிறார். குறிப்பாக சில உடல் பாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் சில வகையான காளான்களை உட்கொண்டால்  பிரச்சனைகள் அதிகரிக்கும் என அவர் எச்சரிக்கிறார். 


இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் காளான் சாப்பிடக்கூடாது


செரிமான பிரச்சனைகள்


அடிக்கடி வயிற்றுப்போக்கு, உடல் உப்பசம், வாயுத்தொல்லை ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் காளான் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காளான் இந்த அசௌகரியத்தை அதிகரிக்கும். இந்த நபர்கள் காளான் சாப்பிட்டால், மீண்டும் வயிற்று வலி, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். 


மேலும் படிக்க | உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்


தோல் பிரச்சனை


காளான் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன, ஆனால் தோல் பிரச்சனை உள்ளவர்கள் காளானை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே தோல் பிரச்சனைகள் உள்ளவர்கள் காளான் உட்கொள்வதால், அதன் காரணமாக உங்களுக்கு தோல் வெடிப்பு, தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை ஆகியவை ஏற்படக்கூடும்.


அதிக சோர்வால் அவதிப்படுவார்கள்


அடிக்கடி சோர்வாக உணரும் நபர்களுக்கு, காளான்களை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கலாம். சிலருக்கு அடிக்கடி ஆற்றல் பற்றாக்குறை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் காளானை தவிர்க்க வேண்டும். இவர்கள் காளான் உட்கொண்டால் இவர்களது ஆற்றல் நிலைகள் இன்னும் குறையக்கூடும். 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )


மேலும் படிக்க | High BP டென்ஷன் இனி வேண்டாம்: இந்த 3 பழங்கள் நிவாரணம் அளிக்கும்.. கண்டிப்பா சாப்பிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ