காளான்கள், குறைவான கொழுப்பு மற்றும் குறைவான கலோரி கொண்ட உணவாகும். இதில் புரதங்கள் மட்டுமல்லாது, வைட்டமின் சி, பி மற்றும் டி, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன.
வைட்டமின் டி சத்து நிறைந்துள்ள காளான், எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் டி சத்து இருந்தால் தான் கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
காளான் புரதச்சத்து நிறைந்த உணவு என்பதால், உடல் எடையை குறைக்கவும் மிகவும் உதவுகிறது. புரதச்சத்து இல்லாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காளான்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை அதிகரித்து, மலச்சிக்கல் வயிற்று உப்புசம், ஆசிடிட்டி போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
காளான்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ப்ளீட்டா குளுகன் போன்ற கலவைகள் உள்ளன. இவை நோய் கிருமிகளுக்கு எதிராக போராட உதவி புரிகின்றன.
காளானிலுள்ள ஊட்டசத்துக்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும். இதில் ஆண்டி ஏஜிங் பண்புகள் அதிகமாக உள்ளதால் முதுமையை அண்ட விடாது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.