உலகில் மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு என்பது எப்படி தவிர்க்க முடியாததோ அதேபோன்று தான் ஒருவரது முதுமை நிலையும், ஒவ்வொருவரது வாழ்விலும் முதுமை என்பது வந்தே தீரும். இந்த நிலையை அடையாமல் யாராலும் இருக்க முடியாது, முதுமை அடைந்துவிட்டால் கன்னம் சுருங்கி, முடி நரைத்து, ஆரோக்கியம் குன்றி இருப்பது போன்றவை ஏற்படும் என்பதால் பலரும் வயதாவதை நினைத்து சற்று கவலை கொள்கிறார்கள்.  வாழ்நாள் முழுவதும் இளமையாகவே நம்மால் இருந்துவிட முடியுமா என்றால் முடியாது. ஆனால் சில வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் 40 வயதிலும் 20 வயது போல காட்சியளிக்கலாம், முதுமை தோற்றத்தை கொஞ்ச காலத்திற்கு நம்மால் தள்ளிப்போட முடியும்.  முதுமை தோற்றத்திற்கு வயது ஒரு காரணம் என்றாலும் நம்முடைய மனநிலை, வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம் போன்றவையும் மற்றொரு காரணமாகும்.  கீழ்கண்டவற்றை நீங்கள் முறையாக பின்பற்றுவதன் மூலம் 40 வயதிற்கு மேலும் அழகாகவும், இளமையாகவும் தெரியலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பளு தூக்குதல்:


வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பளு தூக்கவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், இதனை செய்வதால் அழகாக இருப்பது மட்டுமின்றி உங்கள் உடலை வலிமையாக வைக்க உதவுகிறது மற்றும் இது உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.


மேலும் படிக்க | Health Alert! 'இவற்றை' சாப்பிட்ட பிறகு பால் அருந்தக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்!


நடைபயிற்சி : 


பொதுவாக நடைபயிற்சி ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அதிகரிக்க நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும்.  நடைப்பயிற்சியில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதற்கு எவ்வித உபகரணமும் தேவையில்லை, மேலும் எந்த வயதினராலும், எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியும்.


நல்ல தூக்கம் : 


சரியான தூக்கம் இல்லையென்றால் பல்வேறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும், நல்ல தூக்கம் தான் ஒருவரது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு துணைபுரிகிறது.  தினமும் இரவில் சரியாக 7-8 மணிநேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும், சரியாக தூங்காவிட்டால் சீக்கிரமே முதுமை தோற்றத்தை பெற நேரிடும்.


மது அருந்துவது:


மது அருந்துவது மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  மது அருந்துவதால் ஒருவரின் தூக்கம், செயல்திறன், மனநிலை, அறிவாற்றல் செயல்பாடு, குடல் ஆரோக்கியம், ஹார்மோன்கள் மற்றும் ரத்த சர்க்கரை அளவு போன்றவற்றில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. 


ஊட்டச்சத்து நிறைந்த உணவு:


ஒருவர் உண்ணக்கூடிய உணவு இளமை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது. அதனால் தினசரி உண்ணும் உணவில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் அனைத்தும் சரியான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு 1000 கலோரிகளுக்கும் 14 கிராம் நார்சத்து இருக்க வேண்டும்.


மனநிலை:


முதலில் தனக்கு வயதாகிவிட்டது என்று நினைப்பதை ஒவ்வொருவரும் நிறுத்த வேண்டும், வயதாகிவிட்டதால் தன்னால் இயலாது என்பது போன்ற சிந்தனைகளை கைவிட வேண்டும்.  தனக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பது அனைவரது மனதிலும் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.  உங்கள் வயதை கணக்கில் கொள்ளாமல் இருப்பதை வைத்து உங்களை எப்படி அழகாக கட்டலாமோ அதை செய்யுங்கள்.


மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ