கெட்ட கொலஸ்ட்ராலுக்கு அருமருந்து இந்த பானம், தமனிகள் சுத்தமாகும்
LDL Cholesterol Remedies: உடலில் அதிகப்படியான எல்டிஎல் கொலஸ்ட்ரால் இருப்பது மரணத்ததை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கொலஸ்ட்ரால் இயல்பை விட அதிகமாக இருந்தால், அதை சமநிலை படுத்த இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
LDL Cholesterol Remedies: கொலஸ்ட்ரால் என்பது இரத்த நாளங்களில் இருக்கும் ஒரு வகை கொழுப்பு ஆகும், இது செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உடல் பயன்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் என்பது இரண்டு வகைகளாகும் - HDL (நல்ல கொலஸ்ட்ரால்) மற்றும் LDL (கெட்ட நல்ல கொலஸ்ட்ரால்).
இதில் அழுக்கு கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் உடலில் இரத்த ஓட்டம் சரியாக நடைபெறாது. இதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை உருவாக்கும் ஆபத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது.
எல்டிஎல் கொலஸ்ட்ரால் எவ்வளவு இருக்க வேண்டும்?
க்ளீவ்லேண்ட் கிளினிக்கின் படி, பெரியவர்களில் எல்.டி.எல் அதாவது கெட்ட கொழுப்பின் (Bad Cholesterol) அளவு 100 மி.கி/டி.எல் க்கும் குறைவாக இருக்க வேண்டும். அதேசமயம் நல்ல கொலஸ்ட்ரால் HDL அளவு 60 mg/dL க்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்:
கனமான சுவாசம்
நெஞ்சு வலி
சோர்வு
அதிகரித்த அல்லது குறைந்த இதய துடிப்பு
பலவீனம்
கண்ணுக்கு மேலே மஞ்சள் குமிழ்
இதுவே கெட்ட கொலஸ்ட்ராலுக்கு அசத்தலான சிகிச்சை:
தக்காளி சாறு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் லிப்பிட் அளவை மேம்படுத்த அறியப்பட்ட லைகோபீன் கலவை உள்ளது. இதனுடன், தக்காளி சாற்றில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் நியாசின் போன்றவையும் நிறைந்துள்ளது.
வருடம் முழுவதும் தக்காளி சாறு குடித்ததால் கொலஸ்ட்ராலின் நிலை என்னவானது?
2019 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, ஜப்பானில் ஒரு வருடத்தில் 260 பெரியவர்களில் உப்பு சேர்க்காத தக்காளி சாறு குடித்து வந்ததால் LDL கொழுப்பில் இருந்து விடுப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
கொலஸ்ட்ராலை குறைக்க தக்காளி உதவுமா?
தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. இந்த சிவப்பு நிறத்திற்கு லைகோபீன் தான் காரணம். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் அதன் செயல்பாடு ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதாகும். இது அழற்சி எதிர்ப்பு நோய்கள், இதய பிரச்சினைகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றை குறைக்க உதவும் என்று மருத்துவர் ஸ்ரபானி முகர்ஜி குறிப்பிட்டார். உணவு மற்றும் இரசாயன நச்சுயியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தக்காளி சாறு LDL கொழுப்பை குறைப்பதாக கூறப்பட்டுள்ளது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ