Health Tips: சுகர் நோயாளிகளுக்கு இந்த `பழம்` ஒரு வரப்பிரசாதம்
Custard Apple For Diabetes: சீதாப்பழம் சாப்பிடுவதால், இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கம் இயற்கையாகவே உடனடியாக சரிசெய்கிறது. இதுமட்டுமின்றி, இப்பழத்தை சாப்பிடுவதால் மேலும் பல நன்மைகள் கிடைக்கும். எனவே சீதாப்பழம் உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் மற்ற ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
சீதாப்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இது ஒரு பருவகால பழமாகும், இது பெரும்பாலும் அசாம், மகாராஷ்டிராவில் காணப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழம் மிகவும் பயனுள்ள பழமாகும். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் பழங்களை கவனமாக சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள், ஆனால் சீதாப்பழம் உட்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மட்டுமின்றி, உங்கள் உடல் எடையையும் சுலபமாக குறைக்க வைக்கிறது.
இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் பண்புகள் இந்த தேன் போல் தித்திக்கும் பழத்தில் உள்ளது, இது உடலின் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க | இந்த மசாலா 'மேஜிக்' டீ கைவசம் இருந்தால் போதும், சுகர் ஏறவே ஏறாது
எடை இழப்பு
உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், இந்த பழம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் நுகர்வு காரணமாக, உடல் கொழுப்பு விரைவாகக் குறைக்கப்படுகிறது, இதனால் உங்கள் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.
தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும்
முடி உதிர்தல், உச்சந்தலையில் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு பயனுள்ள பழமாகும், இதில் வைட்டமின் சி இருப்பதால் முடி மற்றும் தோலுக்கு சீதாப்பழம் மிகவும் நன்மை பயக்கும். தோல் கறைகள், முகப்பருவைப் போக்க சீதாப்பழம் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வைட்டமின் சி நிறைந்த சீதாப்பழம் சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்புள்ளது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு நோய் மற்றும் வைரஸ் தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சீதாப்பழம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் டீ குடிப்பதால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ