இந்த ஒரு விதை எடையைக் குறைக்கும், மலச்சிக்கலையும் போக்கும்
Weight Loss Seed: உடல் எடையை குறைக்க, நாம் சரியான உணவை தேர்வு செய்ய வேண்டும். எனவே இன்று நாம் ஒரு விதையைப் பற்றி கான உள்ளோம், இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அதிகரித்து வரும் எடையைக் சுலபமாக அ குறைக்கலாம்.
சப்ஜா விதைகள் பலன்கள்: உடல் எடையை குறைக்க நாம் நம்மால் முடிந்த எல்லாம்வற்ற முயற்சிகளை செய்கிறோம், ஆனால் பல முறை முயற்சித்த பிறகும் நீங்கள் விரும்பிய முடிவை அடைய முடியாமல் போகிவிடுகிறது, அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் புதிதாக ஒரு முயற்சி செய்ய நினைத்தால், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ் டிப்ஸ் ஒன்றை தந்துள்ளார். அதன் பின்பற்றுவதான் மூலம் நீங்கள் நினைத்த பலனைப் பெறலாம். டாக்டர் ஆயுஷி யாதவ் கருத்தின் படி, சப்ஜா விதைகளை சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம், அத்துடன் இந்த விதைகள் பல வகையான உடல் பிரச்சனைகளையும் நீக்க உதவும். எனவே சப்ஜா விதைகளின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
சப்ஜா விதைகளில் காணப்படும் சத்துக்கள்
புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்பு, கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், கார்போஹைட்ரேட் போன்ற முக்கியமான சத்துக்கள் சப்ஜா விதைகளில் இருப்பதால், நம் உடலுக்குப் பல வழிகளில் நன்மை பயக்கும்.
சப்ஜா விதைகளின் நன்மைகள்
1. எடை குறைக்க உதவியாக இருக்கும்
அதிகரித்து வரும் எடையைக் குறைக்க சப்ஜா விதைகளைப் பயன்படுத்தலாம், இதற்கு சப்ஜா விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சிறிது தண்ணீரைச் சூடாக்கிய பின் அதில் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இது பசியை குறைக்கிறது மற்றும் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
2. மலச்சிக்கலில் இருந்து விடுதலை
சப்ஜா விதைகள் நமது வயிற்றுப் பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவும், எனவே இந்த விதைகளை தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும், இது மலச்சிக்கல், வாயு, வயிற்றில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும்.
3. எலும்புகள் வலுவாக இருக்கும்
தற்போது உடல்வலி பிரச்சனை அதிகமாக வர ஆரம்பித்துவிட்டது, எலும்பு பலவீனம்தான் இதற்கு முக்கிய காரணம். சப்ஜா விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் கால்சியம் குறைபாடு நீங்கி, எலும்புகள் வலுப்பெற உதவும்.
4. தலைப்பாரம் நீங்கும்
சப்ஜா இலை உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீரை வெளியேற்றும் என்பதால் வியர்வையாக வெளியேற்றி விடும். சளி, சைனஸ் தொந்திரவால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் இந்த இலைகளை கைபிடி அளவு எடுத்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்த வேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.
5. முகப்பரு நீங்கும்
இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்து வந்தால் பரு நீங்கி இயல்பாகும். முகப்பருவால் வந்த தழும்புகளும் மறையும்.
6. பசியைக் கட்டுப்படுத்தும்
சப்ஜா விதைகளை நீரில் ஊற வைக்கும் போது, அவை செரிமான நொதிகளை உருவாக்கும். இந்த நொதிகள் உங்களின் செரிமானத்தை பலப்படுத்தும். அத்துடன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும், பசியைக் குறைப்பதோடு, பசிப்பது போன்ற உணர்வினையும் இது தடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை கரைப்பது இவ்வளவு சுலபமா? கிச்சன் கில்லாடி மசாலாக்கள் இருக்கே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ