லிவர்பூல்: உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் சிக்கித் தவிக்கும் நிலையில், அடுத்தகட்டத்திற்கு உலகை எடுத்துச் செல்லும் முயற்சிகளும் பரிசோதிக்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் அடிப்படையில் இங்கிலாந்து நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாக இரண்டு நாள் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இது நாட்டில் பொது இடங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் திறக்கலாம் என்பதற்கான ஒரு முன்முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  


இங்கிலாந்தின் லிவர்பூலில் இரவு விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு விருந்துக்கு வந்தனர். COVID-19 தொற்றுநோய் இங்கிலாந்தில் குறைந்து வருவதால் வெகுஜன பார்வையாளர்களின் நிகழ்வுகளை மறுதொடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த முன்முயற்சி பரிசோதனை (pilot scheme) மேற்கொள்ளப்பட்டது.



18 முதல் 20 வயதுடைய சுமார் 3,000 பார்வையாளர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள், முகக்கவசங்களை அணியாமல் warehouse ஒன்றில் ஒன்றுகூடி இசைக்கு ஏற்ப நடனமாடினார்கள் என்று ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் நேரில் கலந்துக் கொண்ட ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


Also Read | Venkaboys: ராகுல் டிராவிட்டின் கோப அவதாரம், காரணம் இதுதான்…  


பங்கேற்பாளர்கள் நிகழ்வின் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட COVID-19 சோதனைகளின் எதிர்மறை அறிக்கைகளைக் காட்ட வேண்டியிருந்தது.


லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் (London’s Wembley stadium) ஞாயிற்றுக்கிழமை 8,000 பேர் கலந்து கொள்ளவிருக்கும் கால்பந்து கோப்பை இறுதிப் போட்டியும் இந்த பைலட் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.


சமூக இடைவெளி மற்றும் காற்றோட்டம் தொடர்பான அணுகுமுறைகள் கொரோனா வைரஸின் பரவலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அவதானிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வுகளிலிருந்து கிடைக்கும் தரவுகளை பயன்படுத்துவார்கள்.


Also Read | ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்; சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதா


இங்கிலாந்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் வீதிகளில் இயங்கும் பப்கள் மற்றும் உணவகங்கள் என சில்லறை விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. மேலும் மே 17 முதல் உட்புற விருந்தோம்பல், நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் மேலும் நீக்கப்படும்.


ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் லாக்டவுன் முழுமையாக நீக்கப்படலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (British Prime Minister Boris Johnson) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  


பிரிட்டன் தனது பெரும்பாலான ஐரோப்பிய சகாக்களை விட மிக வேகமாக COVID-19 தடுப்பூசிகளை மக்களுக்கு கொடுத்துவருகிறது. இதுவரை இங்கிலாந்தில் 127,000 க்கும் மேற்பட்ட COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளது. இது உலகளவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை பட்டியலில் ஐந்தாவது இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ: அதிமதுரம் கஷாயம்: கொரோனாவிலிருந்து உங்களை காக்கும், பிற ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR