ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்; சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதா

ஜப்பான் நாடு, என்பது எப்போது நில நடுக்க அச்சுறுத்தல் உள்ள நாடு. மக்கள் எப்போதும், நில நடுக்கம் வந்தால் அதைஅ எதிர் கொள்ளும் தயார் நிலையில் இருப்பார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2021, 04:40 PM IST
  • ஜப்பான் நாடு, என்பது எப்போது நில நடுக்க அச்சுறுத்தல் உள்ள நாடு.
  • மக்கள் எப்போதும், நில நடுக்கம் வந்தால் அதைஅ எதிர் கொள்ளும் தயார் நிலையில் இருப்பார்கள்.
ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்;  சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதா title=

ஜப்பான் நாடு, என்பது எப்போது நில நடுக்க அச்சுறுத்தல் உள்ள நாடு. மக்கள் எப்போதும், நில நடுக்கம் வந்தால் அதை எதிர் கொள்ளும் தயார் நிலையில் இருப்பார்கள். 

அங்கு நில நடுக்கம் அதிகம் ஏற்படுவதற்கான காரணம், 4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளது தான். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஐந்தில் ஒரு பங்கு நிலநடுக்கங்கள் ஜப்பானில் ஏற்படுகின்றன. அந்த நிலநடுக்கங்கள் சில சமயங்களில் சுனாமியையும் ஏற்படுத்தும்.

இந்த நிலையில் ஜப்பானில் (Japan) இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹோன்ஷு தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது.

பசிபிக் பெருங்கடலில் 60 கிலோமீட்டர்  ஆழத்தில் உள்ள இடத்தில் மையம் கொண்டிருந்தது.  இது மியாகி மாகாணத்திற்கு அருகிலுள்ள பகுதியாகும். தற்போது நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தற்போது சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

ALSO READ | சீனாவின் அணைக்கட்டு கனவு தகர்கிறதா, பொறியாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை

ஜப்பானில் உள்ள இஷினோமகி ஷி, மியாகி , இஷினோமகி, ஆகிய நகரங்களில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான இஷினோமகிக்கு தென்கிழக்கே 45 கிலோமீட்டர் தொலைவில் 63 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

மியாகி மாகாணத்தில்,  2011 மார்ச்சில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால், சுனாமி ஏற்பட்டது. இதில், 18,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பூகுஷிமா அணுமின் நிலை பேரழிவையும் ஏற்படுத்தியது. பூகம்பத்தைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் ஒரு அவசர கால மையத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Fukushima அணு உலை கழிவு நீரை கடலில் விட ஜப்பான் முடிவு; எதிர்க்கும் உலக நாடுகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News