உலகளவில் தைராய்டு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எடை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் கோளாறுகள் காரணமாக தைராய்டு பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதில் கழுத்தின் உட்புறத்திலும் காலர் எலும்பிலும் ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி இருக்கும். இது ஒரு வகையான எண்டோகிரைன் சுரப்பியாகும். இதில் இருந்து ஹார்மோன்கள் உருவாக்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தைராய்டு சுரப்பி அதிகரிப்பது அல்லது குறைவது போன்ற பிரச்சனை பெண்களுக்குதான் அதிகமாக இருக்கும். தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன - ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம். 


பல சமயங்களில் தைராய்டு பிரச்சனைகள் பற்றி மக்களுக்கு போதுமான விவரங்கள் தெரியாமல் போய்விடுகின்றன. இந்த பதிவில், தைராய்டு நோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பற்றி காணலாம். 


தைராய்டு: பொதுவான அறிகுறிகள்


- பதட்டம் மற்றும் எரிச்சல்
- அதிகமாக வியர்ப்பது
- கை கால்களில் நடுக்கம்
- முடி உதிர்தல் மற்றும் மெலிதல்
- தூக்கமின்மை
- தசை வலி மற்றும் பலவீனம்
- விரைவான இதயத் துடிப்பு
- அதிகரித்த பசி மற்றும் எடை இழப்பு
- பெண்களின் மாதவிடாயில் ஒழுங்கற்ற தன்மை


தைராய்டு: உணவு


1- நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. நெல்லி ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. நெல்லிக்காயை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. முடி தொடர்பான பிரச்சனை முடிவடைகிறது. நெல்லிக்காயை உட்கொண்டால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். நெல்லிக்காயை சாப்பிடுவதால் தைராய்டு பிரச்சனை குறைகிறது. 


2- தேங்காய்: தைராய்டு நோயாளிகளுக்கு தேங்காய் சிறந்தது. உணவில் தேங்காய் சேர்க்கலாம், அல்லது, தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் சாப்பிடுவதால் அவர்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.


3- பால் பொருட்கள்: உங்களுக்கு தைராய்டு இருந்தால், பால், தயிர், சீஸ் மற்றும் பிற பால் பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். அவற்றில் போதுமான அளவு கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றால் உதவி கிடைக்கும்.


ALSO READ | கற்கண்டு சாப்பிட மட்டுமல்ல ‘கண் பார்வைக்கும்’ இனிப்பானது! 


4- அதிமதுரம்: தைராய்டு சுரப்பியை சமன்படுத்தும் பல சத்துக்கள் அதிமதுரத்தில் காணப்படுகின்றன. இதை சாப்பிடுவதால் சோர்வு மற்றும் பலவீனம் ஆகிய பிரச்சனைகள் குறைகன்றன.


5- சோயா: தைராய்டு நோயாளிகள் சோயா பால், டோஃபு அல்லது சோயாபீன் போன்ற சோயாபீனிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை உணவில் உட்கொள்ள வேண்டும். ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும் இரசாயனங்கள் அவற்றில் உள்ளன. இருப்பினும், இதனுடன் நீங்கள் அயோடின் அளவையும் கட்டுப்படுத்த வேண்டும்.


6- அயோடின்: தைராய்டு நோயாளியின் உணவில் அயோடின் கண்டிப்பாக இருக்க வேண்டும். அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது தைராய்டு சுரப்பியின் பக்க விளைவுகளை குறைக்கிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | வாயு பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி? வீட்டு மருத்துவம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR