மாதவிடாய் காலங்களில் மென்சுரல் கப் பயன்படுத்து நல்லதா

மாதவிடாய் காலத்தில் மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்துவது எப்படி என்று இங்கே பார்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2021, 02:39 PM IST
மாதவிடாய் காலங்களில் மென்சுரல் கப் பயன்படுத்து நல்லதா title=

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு பதிலாக மென்சுரல் கப் வந்துள்ளது. மாதவிடாய் நாட்களில் பெண்களின் சுகாதாரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும். 

இந்த மென்சுரல் கப் (Menstruation) விலை 2000 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த கப்பை நீங்க ஒரு முறை வாங்கிட்டா சுமார் 10 வருடங்களுக்கு பயன்படுத்த முடியும். இதை, பெண்கள் பயன்படுத்துவதற்கான வழி முறைகளைப் பற்றி முகநூலில் விழிப்புணர்வு வீடியோக்களை பலருண் பகிர்ந்து வருகின்றனர். இதை எப்படி பயன் படுத்துவது என்பது பற்றி பார்கலாம்...! 

ALSO READ: Menstrual cycle: மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

மென்சுரல் கப்:

* சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட மென்சுரல் கப்பானது மாதவிடாய் நேரத்தில் பெண்கள் நாப்கினுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை கப். 

* இந்த மென்சுரல் கப்-பை பயன்படுத்தும் பொது 4 முதல் 12 மணி நேரத்திற்குள் அகற்றி அதை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

மென்சுரல் கப் பயன்கள்: 

* நாப்கினால் சுற்றுச்சூழல் மாசடைய வாய்ப்புள்ளது. அனால், இந்த மென்சுரல்-கப் பயன்படுத்துவதால் நிச்சயம் சுகாதாரக் கேடு ஏற்படாது.

* மழையில் நனையும் போது நாப்கின் நனைந்துவிடுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருக்கும். ஆனால், இந்த கப்பை பயன்படுத்துவதால் அப்பாடி பயப்படவும் தேவை இல்லை. 

மென்சுரல் கப் பக்கவிளைவுகள் 

* சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது பொருந்தவே பொருந்தாது. அதனால் பயன்படுத்த நினைப்பவர்கள் முன்கூட்டியே மருத்துவரை ஆலோசித்து உபயோகிப்பது நல்லது.

* சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமித் தொற்று ஏற்படலாம்.

* இந்த மென்சுரல் கப் பெண்களின் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படாத பட்சத்தில் கண்டிப்பாக இது பயனுள்ளதாக அமையும்

ALSO READ: ஓய்வு எடுப்பது ஆபத்தா? அதிர்ச்சி தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News