ஒரு மனிதனின ஆரோக்கியத்திற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. ஆனால் தற்காலத்தில் பெரும்பாலானோர் தூக்கத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நைட் ஷிஃப்ட் செல்கிறவர்கள் தூக்கம் சூழலால் கெட்டுப்போனாலும், இரவில் வீட்டில் இருப்பவர்களும் தூக்கத்தை அலட்சியம் செய்கின்றனர். தூக்கு கெடுவதற்கு பெரும்பாலும், கையில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்களே காரணம்.


தூக்கம் ஒழுங்காக இல்லாவிட்டால் மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளும், உடல்நல பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கான சிறந்த வழிகள்:


மேலும் படிக்க | ஒரே வாரத்தில் 3 கிலோ வரை எடை குறைக்க சுரைக்காய் சாப்பிடுங்க


ஸ்மார்ட்போன், டி.வி. லேப்டாப் போன்ற எந்த வகையான மின்னணு சாதனங்களையும் தூங்குவதற்கு முன்பு பார்க்கக்கூடாது. இந்த சாதனங்கள் அனைத்தும் நீல ஒளியை வெளியிடுகின்றன. இது தூக்கத்தை பாதிக்கச்செய்யும் தன்மை கொண்டது.


படுக்கையறை சூழலை உறங்குவதற்கு ஏதுவாக உருவாக்க வேண்டும். அது குளிர்ச்சியாகவும்,சுத்தமாகவும், இருட்டாகவும், சத்தமில்லாமலும் அமைந்திருக்க வேண்டும். இவை நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.


மேலும் படிக்க | 40 வயது ஆகிவிட்டதா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணியே ஆகணும்!


தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூங்கி காலையிலும் ஒரே நேரத்தில் எழுந்திருங்கள். அதனை கடைப்பிடிக்கும்போது எழுந்திருக்க வேண்டிய நேரத்தை உடல் அறிய உதவும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கும்.


காபி, டீயில் கலந்திருக்கும் காபின் விழிப்புடன் வைத்திருக்கும் தன்மை கொண்டது. எனவே, தூங்க செல்வதற்கு முன்பு டீ மற்றும் காபியை தவிர்க்கவும். மேலும், தூங்குவதற்கு முன்பு எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ள வேண்டும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR