தக்காளியை அன்றாட உணவில் முக்கிய பங்காக சேர்த்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்க வகிக்கிறது. பெரும்பாலான உணவு வகைகளில் தக்காளி சேர்க்கப்படுகிறது. இத்தகைய தக்காளியில் மருத்துவ குணம் உள்ளது. அதாவது வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது. இது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தாலியில் உள்ள ஆன்கோலஜி ஆய்வு மைய நிபுணர் டேனியலா பரோன் தக்காளி குறித்து ஆராய்ச்சி நடத்தினார். வயிற்று புற்று நோயை ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் புற்று நோய் ஏற்படுகிறது. ஆனால் தக்காளி சாறுக்கு புற்று நோயை உருவாக்கும் திசுக்களை மேலும் வளரவிடாமலும், அவை பரவாமலும் தடுக்கும் சக்தி உள்ளது.


இதன் மூலம் வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே, உணவில் அதிக அளவு தக்காளி சேர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் செல்லுலார் பிசியாலஜி என்ற மருத்துவ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.