அதிகரித்து வரும் COVID-19 தொற்று பாதிப்புகலோடு, கேரளாவில் குரங்கு காய்ச்சல் தொற்று பதிவாகியுள்ளது மக்கள் மனதில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முக்கியமாக பாதிக்கும் ஒரு காய்ச்சலான தக்காளி காய்ச்சலின் பரவல் கேரளாவில் பீதியை கிளப்பி வருகிறது. இந்தக் காய்ச்சல் மற்றும் அது உங்கள் குழந்தைகளுக்குப் பரவும் வழிகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தக்காளி காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது முக்கியமாக குழந்தைகளை (5 வயதுக்கு கீழ்) பாதிக்கிறது. இந்த நோய் தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சிவப்பு நிற கொப்புளங்கள். அவை சிறிய தக்காளியைப் போலவே இருக்கும்.


தக்காளி காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் சில:


தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள்
தோல் எரிச்சல்
மூக்கு ஒழுகுதல்
அதிக காய்ச்சல்
வயிற்று வலி
குமட்டல் அல்லது வாந்தி
தொடர் இருமல்
உடல் வலி
தசை வலி
மூட்டு வலி
தும்மல்
வயிற்றுப்போக்கு
மிகுந்த சோர்வு 


மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்


தக்காளி காய்ச்சலில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்:


தக்காளிக் காய்ச்சல் தற்போது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மிகவும் குறைவாக இருந்தாலும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம்.


குழந்தைகளை தக்காளி காய்ச்சலில் இருந்து பாதுகாப்பதற்கான வழிகள்


உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பும் போதெல்லாம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள்.


தொற்று நோய்களைத் தடுக்க, சுகாதாரம் மற்றும் தூய்மை மிகவும் முக்கியமானது. உங்கள் குழந்தைகளின் படுக்கையறை மற்றும் குளியலறையை சுத்தம் செய்து, அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அவர்களின் பொம்மைகளை கிருமி நீக்கம் செய்யுங்கள்.


தக்காளி காய்ச்சல் குறித்த தகவல் இருந்தால், உங்கள் பிள்ளையின் உடமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்.


மேலே பட்டியலிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் குழந்தைகளிடம் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். மேலும், உடனடியாக அவர்களை தனிமைப்படுத்ததி, மற்றவர்களுடனான தொடர்பில் வருவதை தடுக்கவும்.


சானிடைசரைப் பயன்படுத்தாமல் தேவையில்லாமல் அவர்களின் முகம், கண்கள் மற்றும் மூக்கைத் தொடுவதைத் தவிர்க்க உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ