திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக சர்க்கரை நோய் பரிசோதனை திட்டத்தினை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக வலங்கைமான் தாலுகாவிற்குட்பட்ட கொட்டையூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையத்தினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
அதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது... ''கேரளாவில் பரவியுள்ள தக்காளிகாய்ச்சலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் யாருக்கும் இத்தகைய வைரஸ் இல்லை என்றபோதிலும் கேரள தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கேரளாவில் வேகமாகப் பரவும் தக்காளி காய்ச்சல்...80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை என்பது முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இம்மருத்துவமனையில் எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ளாமல் சீரழித்தனர். இத்தகைய சூழலில் முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து ஒரு கட்டடத்தை திறந்துவைத்த பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டார்.
மேலும் இருதய நோய்க்கான சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ 4 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் அமைய இருக்கிறது. திருவிழிமிழலை, வடுவூர், முத்துப்பேட்டை, வட்டார அளவிலான பொது சுகாதாரமையங்கள் ரூ.3.23 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளது. திருவாரூரில் இரண்டு துணை சுகாதார நிலையங்கள் தலா ரூ.32 லட்சம மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வக பரிசோதனைக்காக ரூ.8.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 60 துணை சுகாதார நிலையங்கள் நலவாழ்வு மையங்களாக மாற்றி அமைப்பதற்கு ரூ.17 லட்சம் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.
மேலும் படிக்க | தக்காளி காய்ச்சல்- அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன? தமிழகத்தில் அச்சம் வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR