Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!
சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சீரகம் இந்திய சமையலறையில் நிச்சயமாக இருக்கும் ஒரு மசாலா பொருள் சீரகம் ஆகும். உணவுக்கு சுவையும் மணமும் சேர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சீரகத்தை உணவில் சேர்ப்பதால், செரிமான சக்தி மிகவும் அதிகரிக்கிறது. ஆனால், அளவிற்கு அதிகமான அளவில் சீரக எடுத்துக் கொள்வது பல தீங்குகளையும் விளைவிக்கும். எனவே, சீரகத்தை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. சீரகத்தின் பக்க விளைவுகளை ((Side Effects of Cumin Seeds) அறிந்து கொள்வோம்.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
எரிச்சல் உணர்வு - சீரகத்தை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதன் காரணமாக, மார்பில் எரிச்சல் உணர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கும் ஆபத்து - சீரகத்தை அதிகமாக உட்கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும். எனவே சீரகத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும். நீண்ட நாட்கள் சீரகத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
கருச்சிதைவு ஏற்படும் அபாயம் - கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏப்பம் பிரச்சனைகள்- சீரகத்தை அதிகமாக உட்கொள்வது ஏப்பம் விடுவதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏப்பம் விடுவதன் மூலம், உங்கள் குடல் மற்றும் வயிற்றில் சேமிக்கப்பட்ட வாயு வெளியேறுகிறது என்றாலும், அடிக்கடி வரும் ஏப்பம் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
அதிக ரத்த போக்கு - பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீரகத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். எனவே அந்த சமயங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை அளவு மிகவும் குறையும் - அதிக அளவு சீரகத்தை உட்கொள்வதால், உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. எனவே சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் குறைவான அளவு சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR