சுரைக்காய் நீர்க்காய்: சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி, சி, நீர்சத்து, தாது உப்பு, புரதம், கார்போஹைட்ரேட் என பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய். சுரைக்காய் ஒரு நீர்க்காய், இதை சமையலில் பலவிதங்களில் பயன்படுத்தலாம். பொரியல், கூட்டு, சாம்பார் என விதம் விதமாய் சுரைக்காயை சமைக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், சுரைக்காய் நீர்க்காய் என்பதால், இதில் பிரத்யேகமான சுவை இருக்காது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதேபோல, சுரைக்காயை மிக்சியில் அடித்து சாறு எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். உடல் சூடு தொடர்பான பிரச்சனைகளையும் சுரைக்காய் சீர்படுத்தும். அதோடு, சீறுநீரக கோளாறு போன்றவற்றில் இருந்தும் குணம் பெறலாம். 


செரிமானம் அதிகரிக்கிறது


சுரைக்காய் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு உருவாவதை நிறுத்துகிறது. இந்த உணவு வயிற்றை லேசாக வைத்து, மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கிறது.  


வளர்சிதை மாற்றத்திற்கு சுரைக்காய்


செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றமும் இதனால் அதிகரிக்க தொடங்குகிறது. உங்கள் வளர்சிதை மாற்றம் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறதோ, அவ்வளவு வேகமாக உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது.


மேலும் படிக்க | தொப்பை அதிரடியாக குறைய இந்த ஸ்பெஷல் தண்ணீரை குடியுங்கள் போதும்


நீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுரைக்காய்


சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, என நீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்தது சுரைக்காய். செரிமானத்தை அதிகரிக்க சுரைக்காய் உதவும். அதேபோல், தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் சீர்படுத்தி, சருமத்தில் நீர்த்தன்மையை தக்க வைக்கிறது சுரைக்காய். இதனால், சரும வறட்சியைப் போக்கி பளபளக்க வைக்கும் சுரைக்காய் என்பது இந்த நீர்க்காயின் சிறப்பு.  


உடல் எடையை குறைக்க சுரைக்காய்


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கல் சுரைக்காய் ஜூஸ் அதிக நீர்ச்சத்து கொண்டது. இது கொழுப்புகளைக் குறைக்கும். வளர்சிதை  மாற்றத்தை அதிகரிக்கும். அதேபோல உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, சுரைக்காய் மற்றும் தேன் இரண்டையும் கலந்து சாப்பிடலாம். இதனால் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை தூண்டச் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.
 
கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம் சத்தை பூர்த்தி செய்யவும் சுரைக்காயை பயன்படுத்தலாம். இரும்பு சத்து, விட்டமின் இருப்பதால், கர்ப்பிணிகள் அவ்வப்போது சுரைக்காயை சமைத்து சாப்பிட்டால்,  கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இவற்றை மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுவது நல்லது.


சுரைக்காய் சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது. சுரைக்காயை உட்கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு சீராகும். 


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இருமல் சளியை போக்கும் கருப்பு மிளகு போக்கும் பிற நோய்களின் பட்டியல்! மிஸ் பண்ணிடாதீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ