நாம் உண்ணும் உணவே உடலுக்கு ஆற்றலாக மாறி நமது செயல்பாடுகளுக்கு காரணமாகிறது. உணவுகளை செரிமானம் செய்யும் உடலின் செயல்முறையில் சில உணவுகளை ஒன்றாக சேர்த்து உண்பது நல்லது என்றால், சிலவற்றை ஒருபோதும் சேர்த்து சாப்பிடவேக்கூடாது. நமது உடலில் உணவு செரிமானம் என்பது ஒருங்கிணைத்தல், உறிஞ்சுதல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அனைத்து செயல்பாடுகளும் சேர்ந்தே உணவை ஆற்றலாக மாற்றுகிறது, தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர் தன்மை கொண்ட உணவு காம்பினேஷன்


ஆனால், இதுவே, சில உணவுகள், மற்றொரு எதிர் தன்மை கொண்ட உணவுடன் சேர்ந்தால், விஷமாக மாறி எதிர்வினை புரியத் தொடங்கிவிடும். அல்லது ஆற்றல்களை குறைத்து நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது.எந்த உணவுடன், எந்த உணவை ஒன்றாக சேர்த்து உண்டால் நன்மை என்ற பட்டியல் நீளமானது என்றால், எதனுடன் எதை சேர்க்கக்கூடாது என்ற பட்டியலும் சிறியது அல்ல.


ஆனால் ஆயுர்வேதத்தின்படி மோசமான உணவு சேர்க்கைகள் என்றால் என்ன? அக்னியின் தொந்தரவு, மோசமான செரிமானம் உட்பட பல கூறுகள், உணவில் இருந்து போதுமான ஊட்டச்சத்தைப் பெற அனுமதிப்பதில்லை. அதுபோன்ற உணவுகளை நாம் ஒன்றாக சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும். 


மேலும் படிக்க | வயசானாலும் வலிமையும் சுறுசுறுப்பும் மாறாம இருக்க... ‘சில’ புரதம் நிறைந்த உணவுகள்!


ஆயுர்வேதத்தின்படி ஒன்றாக சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் 


பழங்கள்


பழங்கள், முலாம்பழம், புளிப்பு பழங்கள், வாழைப்பழங்கள் ஆகியவற்றுடன் பால் அருந்தக்கூடாது. இவற்றுடன் பால் இணைந்தால், அது இரண்டின் ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் வலுவிழக்கச் செய்து, அவற்றை வீணக்கிவிடும். சமோசா/பராத்தா/கிச்சடி போன்ற காரம் நிறைந்த பொருட்களுடன் பழங்களை சாப்பிட வேண்டாம். அதேபோல, கொதிக்கும் தேநீருடன் பழங்களை ஒருபோதும் ஒன்றாக உண்ண வேண்டாம்.


தானியங்கள் காம்பினேஷன்


மரவள்ளிக்கிழங்கு மற்றும் பழங்களுடன் தானியங்களை உட்கொள்ளக்கூடாது. காய்கறிகளுடன் பழங்கள் மற்றும் பால் சாப்பிடக்கூடாது. முட்டை, பால், மீன், பழங்கள், தயிர் மற்றும் இறைச்சி ஆகியவற்றுடன் அதிக புரதம் மிக்க பருப்பு வகைகளை சேர்த்து உண்பது மோசமான விளைவை ஏற்படுத்தும். 


சீஸ், சூடான பானங்கள், புளிப்பு பழங்கள், பால், மாம்பழங்கள், நைட்ஷேட்ஸ், பீன்ஸ், முட்டை, மீன் ஆகியவற்றுடன் தயிர் தவிர்க்கப்பட வேண்டும். கொழுப்பு மற்றும் புரதங்கள் பொருந்தாத உணவுகள். ஏனென்றால் இவை இரண்டிற்கும் வெவ்வேறு செரிமான சாறுகள் தேவைப்படுவதால் இரண்டையும் ஒன்றாக உண்ணும்போது, செரிமானம் பாதிக்கப்பட்டு அஜீரண பிரச்சனை அதிகமாகும். 


மேலும் படிக்க | சைவம் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கேற்ற டயட் டிப்ஸ்-இதோ..!


சீஸ் மற்றும் பழங்கள்


முட்டை, பழங்கள், சூடான பானங்கள், பால், பீன்ஸ், தயிர் ஆகியவற்றுடன் சீஸ் இணைக்கக்கூடாது. புரதங்கள் மாவுச்சத்துகளுடன் ஒத்துப்போவதில்லை என்பதால், இவை இரண்டையும் ஒன்றாக உண்பதால், அஜீரணக் கோளாறு ஏற்படும்.


குளிர் பானங்கள் மற்றும் சீஸ்
குளிர் பானங்கள் மற்றும் சீஸ் இரண்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை. இவற்றை சேர்த்து சாப்பிட்டால் செரிமானத்தை பாதித்து வாயு  பிரச்சனையையும் வயிற்று வலியையும் உண்டாக்கும்.


தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றுடன் வெள்ளரி, முலாம்பழம் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை இணைக்கக்கூடாது. அதேபோல, பால், தயிர், தக்காளி மற்றும் வெள்ளரி ஆகியவற்றுடன் எலுமிச்சையை சேர்க்க வேண்டாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை சட்டுபுட்டுன்னு குறைக்கனுமா? இந்த ‘ஜெல்’ இருக்க கவலை ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ