எலும்புகளை அழிக்கும் மிக மோசமான 5 உணவுகள்... லிமிட்டாக சாப்பிடணும்...!
Bone health | உடம்பு ஆரோக்கியத்தின் ஆதாரமான எலும்புகளை பாதிக்கும் மிக முக்கியமான 5 உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை சரியான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
Bone health Tips Tamil | உடல் ஆரோக்கியத்தின் ஆதாரமாக விளங்கும் எலும்புகளை எப்போதும் பலப்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்து, சரியான உணவு முறைகளை பின்பற்றினால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இப்போதைய காலகட்டத்தில் எலும்பு ஆரோக்கியத்துக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் பல வகையான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அந்தவகையில் எலும்புகளையே பாதிக்கும் முக்கிய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எலும்பு புற்றுநோய், குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு தொற்று, ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோனெக்ரோசிஸ், ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோமலாசியா போன்ற பல நோய்கள் எலும்புகளை சீரழிக்கும். சில நோய்கள் மரபணு காரணமாக ஏற்பட்டாலும், அன்றாடம் நாம் செய்யக்கூடிய சில தவறுகளும் எலும்பு ஆரோக்கியத்தை கெடுப்பவையாக இருக்கின்றன.
குறிப்பாக உணவு முறை. அதில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தும் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது கால்சியம். இந்த கால்சியம் தவறான உணவு முறைகளால் தட்டுப்பாடு ஏற்படும். மிக முக்கியமாக கீழே சொல்லப்படும் 5 உணவுகளை எடுத்துக் கொள்வதில் இருந்து மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
எலும்புகள் ஆரோக்கியத்தை பாதிக்கும் 5 உணவுகள்
டீ காபி :
இந்தியாவில் டீ, காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பஞ்சமில்லை, நம்மில் பலர் நம் நாளை டீ காபி குடிப்பதில் இருந்துதான் தொடங்குகிறோம், ஆனால் அவற்றில் அளவு அதிகமாக இருக்கும் காபின் எலும்புகளுக்கு எதிரி. அவை எலும்புகளை கடுமையாக பாதிக்கும். இதனால் எலும்பின் அடர்த்தி குறையும். எனவே இது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... தினம் வெறும் வயிற்றில் ஊறவைத்த 4 பேரீச்சம்பழம் போதும்
இனிப்பு உணவு :
இனிப்பு உணவுகள் நீரிழிவு நோயை மட்டுமே ஏற்படுத்தும் என பலரும் கருதிக் கொண்டிருக்கிறோம். உடலின் இன்சுலின் சுரப்பில் மாற்றம் ஏற்படுத்தும் செயற்கை இனிப்புகள் தான் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிப்பவையாக இருக்கின்றன. எலும்புகளை பாதிக்கும் இனிப்புகளை சரியான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் தவிர்ப்பது கூட நல்லது தான்.
மதுபானம்
ஆல்கஹால் பல நோய்கள் மற்றும் தீமைகளின் வேர் என்றாலும், அது எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக, எலும்புகளின் வளர்ச்சி நின்று, எலும்பின் அடர்த்தியும் குறையத் தொடங்குகிறது. இதனால் சாதாரண அசைகளில் கூடஎலும்பு முறிவு ஏற்படும். எனவே, எலும்புகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் மது வகைகளை நுகர்வதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு பொருட்கள்
சோடியம் நமது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. உப்பு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதில், எலும்புகள் மெல்லியதாகவும் பலவீனமாகவும் மாறும், இதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்றவற்றிலிருந்து எப்போதும் விலகி இருங்கள்.
சோடா பானம்
சோடா பானம் எப்போதும் உடலுக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக நீங்கள் சோடா பானங்களை சாப்பிடும்போது மிகப்பெரிய பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். வாய்வு பிரச்சனை முதல் எலும்பு ஆரோக்கியம் கெடுவது வரை மிக மோசமான சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். சோடா பானங்கள் தீங்கானவை. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடும்போது செரிமானத்துக்காக சோடா குடிப்பார்கள். ஆனால், அதனால் ஏற்படும் சிக்கல் உடனே உங்களுக்கு தெரியாது. நாட்பட்ட அளவிலேயே புரிந்து கொள்வீர்கள். அதனால், எப்போதும் இயற்கை பழச்சாறுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.
மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை இயற்கையாக நீக்க உதவும்... சில பழக்கங்கள்
(பொறுப்பு துறப்பு : எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் எடுத்துள்ளோம். உங்கள் உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ