நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்... சில சூப்பர் மசாலாக்கள்
இந்திய சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவுகின்றன. அதிலும் சில மசாலாப் பொருட்கள் உடலுக்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
இந்திய சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவுகின்றன. அதிலும் சில மசாலாப் பொருட்கள் உடலுக்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் ஆரோக்கியத்திற்கு சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் சில இந்திய மசாலாப் பொருட்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கருமிளகு
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். என்பது பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி மூலம், இதன் மருத்துவ குணத்தை அறிந்து கொள்ளலாம். சமையலறையில் உள்ள மற்ற மசாலாப் பொருட்களில் கருப்பு மிளகு என்பது மருத்துவ குணங்களின் சுரங்கம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உதவிகரமாக இருப்பதுடன், கருப்பு மிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் காஸ்ட்ரோ ப்ரொடெக்டிவ் உள்ளிட்ட பல வகையான பண்புகள் உள்ளன. இது பல வகையான நோய்களுக்கு மருந்தாவதுடன் பருவகால நோய்களிலிருந்தும் (Health Tips) பாதுகாக்கிறது.
மஞ்சள்
பாட்டி வைத்தியத்தில் மஞ்சளும் முதலிடத்தில் உள்ளது. பாலுடன் சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நாள்பட்ட வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, காயம் வலியிலிருந்து நிவாரணம் வழங்கவும் மஞ்சள் செயல்படுகிறது. குருகுமின் நிறைந்த மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் நிறைந்துள்ளன. இது சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் உதவுகிறது. மஞ்சள், நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் ஆகியோருக்கான அருமருந்து. இது வளர்சிதை மாற்றத்தை தூண்டு கொழுப்பை எரிப்பதுடன், சுகர் லெவலை கட்டுப்படுத்துவதிலும் சிறந்தது. தொற்று நோய்களுக்கு எதிராக வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படுகிறது. உடல் பருமன் மற்றும் வாயு பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது செயல்படுகிறது. கோவிட் காலத்தில் மக்கள் இதை அதிகம் பயன்படுத்தினர்.
கிராம்பு
கிராம்பு என்னும் அற்புத மசாலாவை, டீ தயரிக்கும் போது பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அது தவிர பிரியாணி, குருமா போன்ற சில உணவு பொருட்களை தயாரிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பது அதன் சிறப்பு. கிராம்புகளை தொடர்ந்து உட்கொள்வது பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். அதோடு, சிறந்த வலி நிவாரணியாக இருக்கும்.
மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... தினம் 8 மணி நேரம் தூங்குவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
வெந்தயம்
உணவில் தினமும் கட்டாயம் சேர்க்க வேண்டிய மிகவும் பயனுள்ள மசாலாக்களில் ஒன்று வெந்தயம். இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெந்தயம், நீரிழிவு முதல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவடு வரை பல வகைகளில் நன்மை அளிக்கும். இதனை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, நாம் தாயரிக்கும் சாம்பார், சில பொரொயல் வகைகளில் பயன்படுத்தலாம். இரவில் தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதாலும் பல நன்மைகள் கிடைக்கும்.
ஜாதிக்காய்
தூக்கமின்மை மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, எடை இழப்புக்கும் ஜாதிக்காய் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில் ஜாதிக்காய் தூக்கம், மன ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு நன்மை பயக்கும் ஒரு சக்திவாய்ந்த மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். ஏனெனில், இது செரோடோனின் என்ற ஹார்மோனை தூண்டுகிறது. இந்த ஹார்மோன் மனதை அமைதிபடுத்தி, நல்ல தூக்கத்தை கொடுத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க உதவும் மேஜிக் பானம்: குடிச்சே குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ