மூளை முதல் இதயம் வரை... தினம் 8 மணி நேரம் தூங்குவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

நம் உடல் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் மிகவும் தூக்கம் முக்கியமானது. தூக்க சரியாக இலை என்றால் சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

ஆரோக்கியமான வயது வந்தோர் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் இதைச் செய்வதால் என்ன பலன்கள் இருக்கும் என்பதை டாக்டர் இம்ரான் அகமது கூறும் விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

1 /9

நல்ல தூக்கம்: உடலுக்கு ஆரோக்கியமான உணவு தேவை என்பதைப் போல், நல்ல தூக்கமும் அவசியம். நல்ல தூக்கம் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைத் தவிர்க்க தினமும் 8 மணி தூக்கம் அவசியம்.

2 /9

தூக்கமின்மை: இரவில் போதுமான மற்றும் நல்ல தூக்கம் இல்லாதவர்கள், அல்லது தூக்கமின்மை பிரச்சனையினால் நீண்ட காலம் அவதிப்படுபவர்களுக்கு, மூளை பக்கவாதம், இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பல தீவிர நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

3 /9

நினைவாற்றல்: தினம் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிப்பவர்களின் மூளை ஆரோக்கியமாக இருக்கும். இதன் காரணமாக நினைவாற்றல் அதிகரிக்கிறது. நல்ல ஓய்வு மூளை சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும்.

4 /9

உடல் பருமனைக் குறைத்தல்: இது உங்கள் எடையைக் குறைக்க, நல்ல ஆரோக்கியமான உணவுடன், நல்ல தூக்கமும் அவசியம். தூக்க இல்லை என்றால், உடலில் மன அழுத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் அளவு அதிகரித்தும், உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

5 /9

இரத்த அழுத்தம்: நல்ல தூக்கம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மிக அவசியம். தூக்கமின்மை காரணமாக, மன அழுத்தம் அதிகரிப்பதால், ரத்த அழுத்த அளவும்  அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

6 /9

நோயெதிர்ப்பு சக்தி: தூக்கம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த நல்ல தூக்கம் அவசியம். இது உங்கள் உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அளிக்கிறது. இதனால், பல வித நோய்கள் ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

7 /9

இதய நோய் அபாயம் குறையும்: நல்ல தூக்கம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அப்பாயம் அதிகரித்து வரும் நிலையில், நல்ல தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது 

8 /9

ஆற்றல் அளவு: நல்ல உறக்கத்திற்குப் பிறகு,  நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். ஏனெனில் உங்களிடம் அதிக ஆற்றல் உள்ளது. ஒரு நல்ல தூக்கம் உங்கள் தன்னம்பிக்கை உணர்வை அதிகரிக்கிறது  என்கின்றனர் நிபுணர்கள்.  எனவே, உங்கள் இலக்குகளை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.