கூலா உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மருதாணி! மருதாணியில் இவ்வளவு விஷயம் இருக்கா?
Ayurveda For Health: எந்தவித பக்கவிளைவும் இல்லாமல், நோய் குணப்படுத்தும் ஆற்றல் மற்றும் குளிர்ச்சியான பண்புகளுக்காக அறியப்பட்ட மருதாணியின் ஆரோக்கிய பயன்கள் உங்களுக்கு தெரியுமா?
மருதாணி செடியின் வேர்கள், தண்டுகள், இலைகள், பூ காய்கள் மற்றும் விதைகள் அனைத்தும் அதிக மருத்துவ குணம் கொண்டவை. மருதாணி இலைகள், நல்ல மணம் மிக்கவை. அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மருதாணி அவசியமான மூலிகையாக உள்ளது. தலைமுடி ஆரோக்கியம் மற்றும் அழகுக்கும் பொறுப்பேற்கும் மருதாணி இயற்கையான எந்தவொரு ரசாயனமும் இல்லாத தலைச் சாயமாக செயல்படுகிறது.
எந்தவித பக்கவிளைவும் இல்லாமல், தலையை அழகுப்படுத்தவும், கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நோய் குணப்படுத்தும் ஆற்றல் மற்றும் குளிர்ச்சியான பண்புகளுக்காக அறியப்பட்ட மருதாணியின் பயன்கள் மிகவும் அதிகமானவை.
மருதாணியின் ஆரோக்கிய நன்மைகள்
தலைவலியிலிருந்து விடுபட உதவுகிறது, குறிப்பாக ஒற்றைத் தலைவலிக்கு மிகவும் நல்லது. பித்த தோஷத்தின் தீவிரத்தால் ஏற்படும் தலைவலியையும் மருதாணி குணப்படுகிறது. பித்தத்தை சமநிலைப்படுத்துவதன் மூலம் இந்த தலைவலியை நீக்குகிறது மருதாணி.
வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் மருதாணி
குடலில் நீர் திரவத்தைத் தக்கவைத்து, அதன் மூலம் வயிற்றுப்போக்கைத் தடுக்கும் மருதாணி, பித்தம் அதிகமாவதால் ஏற்படும் நோய்கள் அனைத்தையும் சீராக்கும் பண்பு கொண்டது.
பொடுகு பிரச்சனைக்கு மருதாணி
தலை பொடுகு, அரிக்கும் தோலழற்சி, சிரங்கு, பூஞ்சை தொற்று மற்றும் காயங்களுக்கு மருதாணி பயன்படுத்தப்படுகிறது. பொடுகு வராமல் தடுக்க உதவும் மருதாணியை, பொடுகு வைத்தியத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை விட மோசமானது ஹைப்பர்யூரிசிமியா! ஏன் எப்படி? அதிர்ச்சி தகவல்
முடியை பலப்படுத்தும் மருதாணி
மருதாணி முடியை பலப்படுத்துகிறது, ஹேர் டையாகப் பயன்படுத்தினால், அது நமது நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை நிரந்தரமாக பாதிக்காது. அதற்குப் பதிலாக, முடி உதிர்வதைத் தடுக்கவும், நம் தலைமுடியை பளபளக்கச் செய்யவும் உதவும்.
மருதாணி அடிப்படையிலான கண்டிஷனரைப் பயன்படுத்துவது உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்த உதவுகிறது.
ஆர்கானிக் மூலிகை மூலப்பொருளான மருதாணி, நரைத்தல் மற்றும் இளநரையை போக்கவும் மருதாணி பயன்பாடு அவசியமானது.
மருதாணியை கையில் மற்றும் கால்களில் வைப்பது நமது கலாச்சார வழக்கம். மருதாணி நல்ல அதிர்வுகளை கொடுக்கும் மூலிகையாக பார்க்கப்படுகிறது. மங்கலமான நிகழ்வுகளில் மருதாணி வைக்கும் பழக்கம் இந்தியாவில் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம் ஆகும்.
மேலும் படிக்க | வெளியே குளுகுளுன்னு மழை பெய்யுதே.. சூடா இந்த 5 ஸ்நாக்ஸை சாப்பிடுங்கள்!
அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் மருதாணி டிசைன்
நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அளிக்கும் மருதாணி, வேறு பல நன்மைகளையும் கொடுக்கிறது. மருதாணியை கைகளில் போட்டுக் கொண்டால், உடல் வெப்பம் தணியும். கை மற்றும் கால்களுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும். கையில் மருதாணி வைப்பதால் உடலில் உள்ள வெப்பத்தை தனித்து உடல் சூட்டை தணிக்கிறது.
மெஹந்தியின் பக்க விளைவுகள்
முடி அல்லது தோலில் பயன்படுத்தும் போது, பெரும்பாலான பெரியவர்களுக்கு மருதாணி பாதுகாப்பானது. இருப்பினும், இது தோல் அழற்சியை (டெர்மடிடிஸ்) ஏற்படுத்தும், இதில் சிவத்தல், அரிப்பு, எரியும், வீக்கம், செதில், உடைந்த தோல், கொப்புளங்கள் மற்றும் வடு ஆகியவை அடங்கும். கூடுதலாக, அரிதாக ஒவ்வாமை எதிர்வினைகளான படை நோய், மூக்கு ஒழுகுதல், மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா ஏற்படலாம்.
மருதாணியின் பெரும்பாலான வகைகள் முற்றிலும் பாதுகாப்பானவை மற்றும் நச்சுத்தன்மையற்றவை, ஆனால் கருப்பு மருதாணி ஒவ்வாமை எதிர்வினைகளைக் கொண்டிருக்கலாம். அதேபோல, மருதாணியை அடிப்படையாக கொண்ட ஹேர்டை, ரசாயனம் உள்ளதாக இருக்க வாய்ப்புள்ளதால் அவை ஓவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, மருதாணியை ரசாயனம் கலக்காமல் பயன்படுத்துவது நல்லது.
மருதாணியை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, அது பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது. தற்செயலாக மருதாணியை உட்கொண்டால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். ஏனென்றால் மருதாணி மூலிகை, உடலின் வெளிப்புறப் பயன்பாட்டிற்கானது, உட்புற பயன்பாட்டிற்கானது அல்ல.
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | தொங்கும் தொப்பையை ஓட ஓட விரட்டலாம்.. 'இதை' மட்டும் சாப்பிட்டால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ