முருங்கைக்காய் மூட்டுகளில் படிந்துள்ள யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வெளியேற்றும், அதன் இலைகளை வெதுவெதுப்பான நீரில் மென்று சாப்பிட இரட்டிப்பு பலன் கிடைக்கும். உடலின் மூட்டுகளில் குவிந்துள்ள யூரிக் அமில அளவைக் குறைக்க, மருந்துகள் மட்டுமல்ல, இந்த சிறப்பு மருந்தையும் அவற்றுடன் பயன்படுத்தலாம், இது யூரிக் அமிலத்தால் ஏற்படும் ஆபத்தை ஒரு கணிசமான அளவிற்கு குறைக்கும்.
 
உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் ஏற்படும் பல பிரச்சனைகளில் முதலில் வெளியில் தெரிவது மூட்டுக்கு மூட்டு வலிப்பது தான். உடலின் மூட்டுகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் யூரிக் அமிலத்திற்கு காரணங்கள் பலவாக இருந்தாலும், முக்கியமானவை மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், அந்த அமிலத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதுமட்டுமல்ல, யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் உணவுகளை ஒதுக்கிவிட்டு, வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வந்தால் சிகிச்சைக்கும் விரைவில் பலன் கிடைக்கும். 


உணவுகளில் ப்யூரின் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான மது அருந்துதல், சில வகையான மருந்துகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற உணவுகளும் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம்.


யூரிக் அமிலம் அதிகரித்தால் ஏற்படும் வலி தாங்க முடியாததாக இருக்கும், உடலில் கோளாறு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்றாலும், சில எளிய வீட்டு வைத்தியம் மூலம் யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம். அதில் ஒன்று தான் பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் முருங்கையை பயன்படுத்தி யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவது.  


மேலும் படிக்க | ஆயுளை நீட்டிக்கும் நார்ச்சத்து! கரையாத நார்ச்சத்தும் கரையும் ஃபைபர் சத்தும்..


முருங்கையின் நன்மைகள் (Health Benefits of Moringa)


முருங்கைக்காய், முருங்கை இலை என முருங்கையின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பவை ஆகும். புரதம், வைட்டமின் B6, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின் (B2), வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), மெக்னீசியம் என பல ஊட்டச்சத்துக்கள் பொதிந்துள்ளன.


யூரிக் அமிலத்தை குறைக்க முருங்கை


உடலில் அதிகரித்து வரும் யூரிக் அமிலத்தை குறைக்க முருங்கை பயன்படும் என்பது நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி வைத்த விஷயம் மட்டுமல்ல, பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. முருங்கையில் (Moringa oleifera) ஹைப்பர்யூரிசெமிக் எதிர்ப்பு கூறுகள் (Anti-hyperuricemic elements) காணப்படுகின்றன, இது உடலின் யூரிக் அமில அளவு மற்றும் கிரியேட்டினின் அளவைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் உள்ள சாந்தைன் ஆக்சிடேஸ் (xanthine oxidase) போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும்.


வெதுவெதுப்பான நீர் + முருங்கை இலை
யூரிக் அமில அளவைக் குறைக்க முருங்கை இலையை எப்போது வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஆனால் காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் குறைந்தது 10 முருங்கை இலைகளை மென்று சாப்பிடுங்கள். அதன் பிறகு வெந்நீர் இரண்டு கிளாஸ் குடியுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து, வெறும் வயிற்றில் முருங்கை இலை + வெந்நீர் சாப்பிட்டு வந்த பிறகு, அதன் விளைவுகள் உடலில் தெரியத் தொடங்கும். 


மேலும் படிக்க | இனிப்பு உணவே பிடிக்காதாவர்களுக்கும் டயபடீஸ்! நீரிழிவுக்கும் சர்க்கரைக்கும் என்ன சம்பந்தம்?


முருங்கை இலைகளின் மகத்துவம்


முருங்கை இலையை பச்சையாக உண்பது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதுடன், வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது. முருங்கைக் கீரையில் உள்ள. வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகின்றன. அதுமட்டுமா? முருங்கை இலைகளில் குர்செடின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளை போக்க முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்.


ஆனால், முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சமைத்து பொரியலாகவும், முருங்கைக்கீரைக் கூட்டு, முருங்கைக்கீரை சூப், முருங்கைக்கீரை துவையல் என பல்வேறு வகையில் சமைத்து உண்டால் அது உடல் நலத்தை மேம்படுத்தும்.
முருங்கைக்கீரையில் உள்ள இரும்புச்சத்து அபாரமானது. அத்துடன் பருப்பு, சேர்த்து சமைத்தால் ஊட்டச்சத்து விகிதம் பல மடங்கு அதிகரிக்கும்.


மருத்துவரின் ஆலோசனை 
முருங்கைக்கீரையை பச்சையாகவும், சமைத்தும் உண்டால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், யூரிக் அமிலம் மட்டுமல்ல, எந்தவொரு ஆரோக்கிய பிரச்சனைக்கும், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது அவசியம் ஆகும். யூரிக் அமிலத்திற்கு சிகிச்சையளிக்க மருத்துவர் ஏதேனும் மருந்துகளை பரிந்துரைத்திருந்தால், அவற்றை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | சன்ஸ்க்ரீனே வேண்டாம், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்களின் அழகு ரகசியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ