உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருக்கா, அப்போ மறந்து கூட பால் குடிக்காதீங்க
பால் ஒரு முழுமையான உணவாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது நம் உடலுக்கு மிகவும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைத் தருகிறது.
பால் குடிப்பதால் ஏற்படும் பல நன்மைகளை குழந்தை பருவத்திலிருந்தே நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். பாலில் கால்சியம், வைட்டமின்கள் ஏ, கே மற்றும் பி12 மற்றும் தியாமின் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் பால் குடிப்பதன் மூலம், மலச்சிக்கல், மன அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுப்படலாம். அது மட்டுமில்லை பாலில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமைக்கு அவசியமானதாக கருதப்படுகிறது. ஆனால் பால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? சிலருக்கு, பால் நுகர்வு மிகவும் தீங்கு விளைவிக்கும். என்வே யார் யார் பாலை குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான பால் உட்கொள்வதால், சிலர் கல்லீரலில் வீக்கம் அதிகரிப்பதாக புகார் கூறுகின்றனர், மேலும் நார்த்திசுக்கட்டிகளின் பிரச்சனையும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து பால் குடித்து வந்தால், அவர்களின் பிரச்சனையும் தீவிரமான வடிவத்தை எடுக்கலாம்.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
1. கொழுப்பு கல்லீரல்: கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பால் குடிக்கக் கூடாது, ஏனெனில் அவர்களுக்கு எளிதில் ஜீரணமாகாது. கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புரதத்தை மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், பால் குடிப்பதால் அஜீரணம், அமிலத்தன்மை, வாயு, சோம்பல், சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
2. கேஸ் பிரச்சனை உள்ளவர்கள்: பாலில் லாக்டோஸ் உள்ளது, இது சில நேரங்களில் செரிமானத்தை பாதிக்கலாம். இதன் காரணமாக, அதிகப்படியான பால் குடிப்பதால் வயிற்றுப்போக்கு, வீக்கம் அல்லது வாயு ஏற்படலாம். வாயு பிரச்சனை உள்ளவர்கள் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
3. ஒவ்வாமை: சிலருக்கு பால் குடித்தால் ஒவ்வாமை ஏற்படும். இதற்கும் லாக்டோஸ் தான் காரணம். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கலாம். இதன் காரணமாக தோலில் அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் அல்லது உடலில் வீக்கம் மற்றும் சொறி போன்றவை ஏற்படலாம், எனவே உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், பால் குடிப்பதை தவிர்க்கவும்.
4. உடல் பருமன்: நீங்கள் உடல் பருமனால் சிரமப்படுகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் பால் குடிக்க பழகிக்கொள்ளுங்கள். ஏனெனில் பால் ஒரு முழுமையான உணவு, ஆனால் பால் உடலில் கூடுதல் கொழுப்பைக் குவிக்கிறது.
5. தோல் பிரச்சனை உள்ளவர்கள்: அதிக அளவு பால் உட்கொள்வது சருமத்திற்கு நன்மை பயக்காது, இது பரு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது மற்றும் முகப்பரு பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | பொடுகுத்தொல்லையா? முடி உதிரும் பிரச்சனையா? இதை செய்து பாருங்கள்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR