உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்
உடல் பருமன் காரணமாக உடலில் நோய்களின் கூடாரமாக ஆகி விடும். இந்நிலையில், உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
Weight Loss Drinks: தற்போது நாம் கடைபிடிக்கும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக உடல் பருமன் பிரச்சனை பொதுவான பிரச்சனை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடல் பருமன் காரணமாக உடலில் நோய்களின் கூடாரமாக ஆகி விடும். நீரிழிவு, இரத்த அழுத்தம் தொடங்கி, மூட்டு வலி மாரடைப்பு வரை, பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே, உடல் எடையை கட்டுப்படுத்துவது மிக அவசியம். அந்த வகையில், உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
செலரி நீர் (Celery Water For Weight Loss)
உடல் எடையை குறைக்க செலரி டீ தயாரித்து குடிக்கலாம். இதற்கு, ஒரு ஸ்பூன் செலரியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அந்த தண்ணீரை சிறிது கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி குடிக்கவும். கொழுப்பை கரப்பதோடு மட்டுமல்லாமல் அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நிவாரணம் அளிக்கும். கீல்வாதம், மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
துளசி தேநீர் (Tulsi Water For Weight Loss)
உடல் பருமனை குறைக்கவும் (Weight Loss Tips), உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க துளசி டீ பெரிதும் உதவும். துளசி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. துளசி தேநீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, துளசி இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும். அதில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வடிகட்டி குடிக்கவும். அசிடிட்டி பிரச்சனை, சளி, இருமல், சரும பிரச்சனை போன்றவற்றில் இருந்து விடுபடவும் இதைப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து... இதயத்தை காக்கும் சூப்பர் பானங்கள்
தேன் மற்றும் எலுமிச்சை நீர் (Lemon - Honey Water For Weight Loss)
எலுமிச்சை நீர் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி உடலில் சேரும் நச்சுக்களையும் நீக்குகிறது. எலுமிச்சை நீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானம் சிறப்பாக இருந்தால் தான் உடல் எடை குறையும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில், தேனை கலந்து குடிப்பது சிறந்த பலன் தரும்.
இஞ்சி தேநீர் (Ginger Water For Weight Loss)
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் இது மிகவும் சிறந்தது. இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் இஞ்சியைத் துருவி போட்டு கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, அதை வடிகட்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.
புதினா தேநீர் (Mint Water For Weight Loss)
உடல் எடையை குறைக்க புதினா இலையில் டீ தயாரித்து குடிக்கலாம். இதனால் உடல் எடை குறைவதுடன், செரிமானத்திற்கும் நல்லது. அசிட்டிடி, நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஆகியவை தீரவும் புதினா அருமருந்தாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இனிப்பு சாப்பிடுவது மட்டுமல்ல... இந்த பழக்கங்களும் சுகரை எகிற வைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ