Best Weight Loss Drink: உடல் எடை கூடுதல், உடல் பருமன் ஆகியவை நம்மில் பலருக்கு இருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமான உணவு பழக்கம் உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஏனெனில், உடல் எடைக்கும் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
உடல் பருமன் வேகமாக குறைய உதவும் உணவு முறை
உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. உடற்பயிற்சி செய்தாலும், நமது டயட் ஆரோக்கியமானதாக உடல் எடையை குறைக்க உதவுவதாக (Weight Loss Tips) இருக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். உடல் பருமன் மற்றும் இடுப்பு, தொப்பை மற்றும் தொடைகளில் சேரும் கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினம். அதற்கு உதவும் வகையிலான சிறப்பான பானம் ஒன்றை பற்றி அறிந்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து அருந்தி வந்தால், சில நாட்களில் உடல் பருமன் (Obesity Control) வேகமாக குறையும்.
கொழுப்பை எரிக்க எலுமிச்சை, துளசி மற்றும் தேன் கலந்த சூப்பர் பானம் (Weight Loss Drink)
எலுமிச்சை: எலுமிச்சை எளிதில் ஜீரணிக்கக்கூடியது, புளிப்புச் சுவை கொண்ட எலுமிச்சை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அதோடு எலுமிச்சை கல்லீரலலில் நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது. உடல்வீக்கத்தையும் குறைக்கிறது. தேனுடன் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் எலுமிச்சை பல நோய்களுக்கு தீர்வைத் தருகிறது. கொழுப்பை எரிக்கும் பண்புகளுடன், வைட்டமின் சி, ஃபோலேட், தயாமின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் நிறைந்துள்ளன.
துளசி விதைகள்: துளசி விதைகளில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (Alpha-Linolenic Acid - ALA) அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. துளசி விதையில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் ஊட்டச்சத்தை உடல் உறிஞ்சுவதை குறைப்பதன் மூலம் கொழுப்பை கரைக்கிறது.
தேன்: ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் தேன் உடல் கொழுப்பை எரிக்கும் மிக சிறந்த உனவாகும். இனிப்பு சுவை கொண்ட , தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி உடல் எடையை எளிதில் குறைக்க உதவுகிறது.
எடை குறைக்கும் சூப்பர் பானத்தை தயாரிக்கும் முறை (How To Prepare Weight Loss Drink)
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி துளசி விதைகள், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். அவற்றை நன்றாக கலக்கவும். இப்போது இந்த வெதுவெதுப்பான நீரை தினமும் வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த பானம் உடல் கொழுபபி எரிப்பதுடன் உங்கள் கல்லீரலையும் சுத்தம் செய்யும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.