கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் திறம்பட செயல்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் KK ஷைலஜாவை ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய நாடுகள் சபையில் செவ்வாய்க்கிழமை ‘பொது சேவை தினம்’ கொண்டாடப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட இந்த விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் மற்றும் ஐ.நா-வின் உயர்மட்ட பிரமுகர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் போது கொரோனா வைரஸுடன் திறம்பட போராடும் அனைத்து தலைவர்களையும் ஐ.நா. பாராட்டியது. இந்த தலைவர்களின் பட்டியலில் கேரள சுகாதார அமைச்சர் KK ஷைலஜாவும்(K. K. Shailaja) இடம் பெற்றார்.


READ | மதுரையில் இன்று முதல் ஆரம்பமானது முழு ஊரடங்கு....30 வரை முழு பொதுமுடக்கம்...! 
இந்நிகழ்ச்சியில் பேசிய ஷைலஜா(K. K. Shailaja), நிஃபா வைரஸைக் கையாண்ட அனுபவங்கள் மற்றும் சுகாதாரத் துறை முக்கிய பங்கு வகித்த 2018 மற்றும் 2019-ஆம் கேரளா வெள்ளங்கள் கொடுத்த இந்த அனுபவங்களே கொரோனா வைரஸை எதிர்கொள்ள உதவியது. கொரோனா காலத்தில் சரியான தீர்வு காண இந்த அனுபவங்கள் தனக்கு உதவியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சீனாவின் வூஹானில் கோவிட் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட காலத்திலிருந்தே, கேரளா WHO உடன் தடமறிந்து ஒவ்வொரு நிலையான இயக்க நெறிமுறை மற்றும் சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்றியது, எனவே, சமூக தொற்று பரவல் விகிதத்தை 12.5% ​​க்கும் குறைவாக வைத்திருக்கிறோம், இறப்பு விகிதம் 0.6% என குறைந்த அளவில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


READ | மதுரையின் சுகாதார ஊழியர் ஒருவர் பிளாஸ்மா நன்கொடைக்கு ஒப்புதல்...
மறுபுறம், கொரோனா வைரஸ் தொற்றுக்கள் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 16 ஆயிரம் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, மேலும் 465 பேரும் இந்த காலகட்டத்தில் இறந்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்போது, ​​ஆரோக்கியமாக இருப்பவர்களின் வரைபடமும் வேகமாக அதிகரித்து வருகிறது. எனினும் இதுவரை, 2.58 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முற்றிலும் கொரோனாவில் இருந்து விடுப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.