மதுரையில் இன்று முதல் ஆரம்பமானது முழு ஊரடங்கு....30 வரை முழு பொதுமுடக்கம்...!

கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் மதுரையில் இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது........

Last Updated : Jun 23, 2020, 08:41 AM IST
    1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    2. மதுரையில் இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
    3. மதுரையில் இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
மதுரையில் இன்று முதல் ஆரம்பமானது முழு ஊரடங்கு....30 வரை முழு பொதுமுடக்கம்...! title=

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில்,  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (19 ஆம் தேதி) முதல் வருகிற 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது.

இந்நிலையில், மதுரையில் இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு

எவை இயங்கக் கூடியவை

> மருத்துவமனை, மெடிக்கல்கள், ஆம்புலன்ஸ் சேவை போன்ற அத்தியாவசிய சேவைகள், கட்டுபாடுகளின்றி இயங்கும்
> அவசர மருத்துவ உதவிக்கு உரிய ஆவணங்களுடன் பயன்படுத்தி கொள்ளலாம்.
> இ-பாஸ் உள்ளவர்களை ரயில்நிலையம் மற்றும் விமானநிலையத்திற்கு அழைத்து செல்ல அனுமதி உள்ளது.
> விமான நிலையம், ரயில் நிலையங்களுக்கு சென்று திரும்பும் ப்ரீபெய்டு ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
> மத்திய, மாநில அரசு அலுவலங்கங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்.
> சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மின்துறை, கருவூலத்துறை, ஆவின், குடிநீர் ஆகியவை முழு அளவில் செயல்பட அனுமதி.
> காய்கறி கடை, மளிகை கடை பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும்.
> ஹோட்டல்களில், காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும்.
> அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
> அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு அனுமதி உள்ளது.

எவை அனுமதியில்லை

> ஆட்டோ, கால்டாக்சி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
> ஆன்லைன் உணவு நிறுவன பணியாளர்கள் தகுந்த அடையாள அட்டையுடன் வேலை செய்யலாம். டீ கடைகளுக்கு அனுமதி இல்லை
> கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்படாது. அதற்கு பதில், அங்கு வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்படும்.

Trending News