நாளுக்கு நாள் மனிதனின் அறிவியல் வளர்ச்சிகள் மலர்ச்சி பெறுகிறதோ இல்லையோ, அவனுக்கு வரும் நோய்களுக்கான வளர்ச்சிக்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது. அதிலும், மன நலம் தொடர்பான பிரச்சனைகள், சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. மன அழுத்தம் என்பது இப்போது பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இந்த ஒரு மன பாதிப்பினால், நம் வாழ்வில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் இதனை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மன அழுத்தம் என்றால் என்ன?


மன அழுத்தம் என்பது ஒரு மனநிலைக் கோளாறு என மருத்துவர்களால் வகைப்படுத்தப்படுகிறது. சோகம், எதையோ இழந்தது போன்ற உணர்வு, சாதாரணமாக இருக்கும் போதே கோபம் கொள்வது போன்றவை இதனால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறியாக இருக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் என்பது ஒவ்வொரு வகையாக இருக்கலாம். இப்படி மன அழுத்தத்தினால பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக செய்யும் சில தவறினால், அந்த நிலையில் இருந்து மீள முடியாமல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி, அவர்கள் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? 


போதை பொருள் உபயோகிக்க கூடாது:


மன அழுத்தினால் ஆழமாக பாதிக்கப்பட்டிருப்போர் பலர் இதிலிருந்து தப்பிப்பதற்காக வேறு உலகை நாடுவர். அப்படி அவர்களுகு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தும் வஸ்துக்களுள் ஒன்று, போதை பொருள். எனவே, மன அழுத்தத்தில் இருக்கும் சமயத்தில் மட்டுமல்ல, எப்போதுமே போதை பொருட்களை உபயோகிக்க கூடாது. மது அருந்துவதில் இருந்து சிகரெட் பிடிப்பதில் இருந்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு போதை இருக்கிறது. எனவே, இவற்றில் மாட்டாமல் மனதை சரிசெய்வதற்கான வழிகளை பார்க்க வேண்டும். 


தனியாக இருக்க வேண்டாம்:


உங்களுக்கு மன அழுத்தம் அல்லது மன சோர்வு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், கண்டிப்பாக தனியாக இருப்பதை தவிர்க்கவும். மனம் சாந்தமடையாமல் இருக்கும் போது அதை அமைதிப்படுத்த கண்டிப்பாக நம்மை விட இன்னொருவர் நமக்கு தேவைப்படுவர். எனவே, இது போன்ற சமயங்களில் தனியாக இருப்பதை தவிர்க்கவும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை சந்தித்து பேசவும். அறையை விட்டு வெளியே சென்று இயற்கையை கண்கூடாக பார்க்கவும். 


மேலும் படிக்க | மன அழுத்தத்தை ஓட விரட்ட... சில உணவுகளும் - பழக்கங்களும்..!


அதிகமாக சாப்பிடுதல்:


பலர், மனச்சோர்வுக்கு ஆளானவுடன் அதிகமாக சாப்பிடுவர். பசியே இல்லை என்றால் கூட அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருப்பர். இது, அவர்களின் உடலையும் உடல் நலனையும் மோசமாக சீர்க்குலைக்கும். இதனால் மனம் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். தூக்கமின்மை, வாயு பிரச்சனை, உடல் பருமன் பிரச்சனைகள் அதிகமாக சாப்பிடுவது மூலமாக வரும். எனவே, அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும். 


படுத்தே இருக்க வேண்டாம்:


ஒருவருக்கு மனச்சோர்வு இருக்கிறது என்றால், அவருக்கு மெத்தையில் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும். உடலுக்கு உழைப்பே கொடுக்காமல் இவ்வாறு படுத்தே இருந்தால், பல்வேறு உடல் நல பாதிப்புகள் உண்டாகலாம். எனவே, வெளியில் செல்ல வேண்டும் என்று தோன்றினால் எழுந்து வெளியில் செல்லவும். உடற்பயிற்சி, நடன பயிற்சி ஆகியவையும் இதற்கு உதவும். 


சாதனங்களில் இருந்து தள்ளியிருத்தல்..


மன அழுத்தத்தில் இருப்பவர்கள், இன்ஸ்டாகிராமில் கணக்கே இல்லாமல் ரீல்ஸை ஸ்க்ரோல் செய்து பார்த்துக்கொண்டே இருப்பர் என்று ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஒரு சிலர், மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க, வீடியோ கேம்ஸ் விளையாடுவர். ஒரு சிலர், தொடர்ந்து படங்கள் பார்ப்பர் அல்லது ஓடிடி தளங்களில் தொடர்களை binge watch செய்து கொண்டிருப்பர். இது உங்கள் உடல் நலனில் பெரிய பிரச்சனையை உண்டாக்கலாம். எனவே, மனிதர்களுடன் நேரம் செலவிட்டு, மன அழுத்தத்தை விரட்டும் வழிகளை தேடுங்கள். 


மேலும் படிக்க | மன அழுத்தம் 'மூளைக்கு' நல்லது! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ