Uric Acid பிரச்சனை இருக்கா? அப்போ தினமும் இந்த ஜூஸ் குடிங்க
யூரிக் அமிலத்தின் பிரச்சனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது, முன்பு இந்த பிரச்சனை வயதானவர்களிடம் மட்டுமே காணப்பட்டது, ஆனால் இப்போது இளம் வயதினருக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
யூரிக் ஆசிட் தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது, இது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம். யூரிக் அமிலம் என்பது மூட்டு வலி, நடைபயிற்சி மற்றும் கால் வீங்குதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் ஒரு வகையான உடல் கோளாறு ஆகும். இருப்பினும், உணவில் சில மாற்றங்களைச் செய்தால், இந்த சிக்கலை சமாளிக்க முடியும். எனவே தினமும் உணவில் சுரைக்காய் சாற்றை சேர்த்து வந்தால் அதன் பலன் சில நாட்களில் தெரியும்.
யூரிக் ஆசிட் உள்ள நோயாளிகள் சுரைக்காய் சாற்றை அருந்த வேண்டும்
சுரைக்காய் வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற பல சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த காய்கறியை சாறு எடுத்து குடித்து வந்தால், அது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். இதற்கு, ஒரு புதிய சுரைக்காயை தோலுரித்து, சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸி கிரைண்டரில் போட்டு அரைக்கவும். இந்த சாற்றில் உப்பு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், மூட்டு வலி மற்றும் எலும்பு வீக்கம் நீங்கும்.
மேலும் படிக்க | Uric Acid:கால்களில் இந்த பிரச்சனை இருக்கா? யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கலாம்
சுரைக்காய் சாற்றின் மற்ற நன்மைகள்
1. நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்: நீரிழிவு நோயாளிகள்சுரைக்காயை தவறாமல் உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை அதிக அளவில் கட்டுப்படுத்த உதவுகிறது.
2. கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்: உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, கரோனரி தமனி நோய் அபாயம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, சுரைக்காய் சாற்றை அடிக்கடி குடிக்கவும்.
3. எடை குறைக்க உதவும்: உடல் எடை கூடுவது இன்றைய காலகட்டத்தின் பெரிய பிரச்சனையாகி விட்டது, இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த காய்கறியில் உள்ள கலோரிகளின் அளவு, உங்கள் இடுப்பு மற்றும் தொப்பையை குறைக்க, சுரைக்காய் சாறு பெரிதும் உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ