கோடைக்காலத்தில், பெரும்பாலானோர் தோல் பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு இயற்கையான பொருட்களையே சார்ந்துள்ளனர். இதற்குக் காரணம், ரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் முடி மற்றும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும். அதே நேரத்தில், இயற்கையான விஷயங்கள் சருமம் மற்றும் முடியை இயற்கையாகவே வெப்பத்திலிருந்து பாதுகாப்பதில் பயனளிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை காலத்தில் நமது தோலும், கூந்தலும் மிகக் கடினமாகவும், வறண்டு போயும், ஈரப்பதமின்றியும் இருக்கும். அதனை ஆரோக்கியமாகவும், ஒளிரும் விதமாகவும் மாற்றக் கூடிய மூலக்கூறுகள் நாவல் பழத்தில் நிறைந்துள்ளன. இது பல வித சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. பழம் மட்டுமின்றி நாவல் பழத்தின் விதை பல ஆயிர்வேத நடைமுறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது, இது உடலில் இரத்த பற்றாக்குறையை ஈடுசெய்யும். எனவே நமது தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புக்கு நாவல் பழம் எத்தனை சிறப்பு வாய்ந்தது என்பதை தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | High Cholesterol Foods: இந்த 5 பொருட்களில் அதிகளவு கொலஸ்ட்ரால் உள்ளது


தழும்புகளை போக்க உதவும்
முகப்பரு காரணமாக, கோடை காலத்தில் சருமத்தில் புள்ளிகள் ஏற்படுவது சகஜம். அத்தகைய சூழ்நிலையில், 8-10 நாவல் பழத்தின் சாற்றை எடுத்து, அதில் தேன் சேர்க்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும். இதை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் முகம் பளபளப்பாகவும், களங்கமற்றதாகவும் இருக்கும்.


நாவல் பழத்தை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தவும்
நாவல் பழத்தின் பயன்பாடு முடிக்கும் மிகவும் நன்மை பயக்கும். கோடையில் கூந்தலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க நாவல் பழம் ஹேர் மாஸ்க் மிகவும் பயனுள்ள செய்முறையாகும். இதற்கு முதலில் நாவல் பழத்தை காயவைத்து அரைக்கவும். இப்போது இந்த பொடியில் 4-5 ஸ்பூன் மருதாணி, தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். தலைமுடியில் நன்கு தடவி 2 மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு அலசவும்.


எண்ணெய் சருமத்தை சரி செய்யும்
சிலருக்கு எண்ணெய் சருமம் மிகவும் எரிச்சலூட்டும். இதற்கு சிறந்த தீர்வு நாவல் பழத்தில் உள்ளது. நாவல் பழம் சருமத்தில் உள்ள அதிகப்படியான இயற்கை எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி நடுநிலையாக்க உதவும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. அரசி மாவு, நாவல் பழத்தின் கூழ் மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றை கலந்து பேஸ்பேக் போட்டால் எண்ணெய் சருமம் கட்டுப்படுத்தப்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR