உடல்நலப் பிரச்சனைகளால் சிரமப்படுபவர்களுக்கு பல சுலபமான வீட்டு மருத்துவமே கைக்கொடுக்கும் அருமருந்தாக இருக்கிறது. வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சமையல் பொருட்களே நமது உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிளகு என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருள். மிளகு (pepper) இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு மிளகு நல்ல தீர்வுகளைக் கொடுக்கிறது.  நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது மிளகின் முக்கியப் பண்பு. நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதற்கு ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் முதன்மையான காரணமாக இருக்கும்.


நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த பல வழிகளில் மிளகு  பயன்படுத்தப்படுகிறது. அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீரில் 1 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி பலப்படும். 


தொடர்ந்து ஒரு மாதம் மிளகுத்தூள் கலந்த வெந்நீரை அருந்திவந்தால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். அதைத் தவிர பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். வெந்நீரில் மிளகுத் தூள் (Hot water with pepper powder) கலந்து குடிப்பதால் உடலில் உள்ள செல்கள் ஊக்கம் பெற்று, நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைவதால் நோய்களின் தாக்கம் குறையும். நோயாளிகள் இதைக் குடிப்பதால், நோயின் பாதிப்பு குறையும்.


மிளகுத் தூள் கலந்த வெந்நீரை (Ways to lose Weight) தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள செல்களுக்கு நீர்ச்சத்து கிடைக்கும். உடல் வறட்சி நீங்கும், தோல்கள் வறண்டு போகாது. சோர்வு ஏற்படாது.  


READ ALSO | நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தினால் எடை குறையும்


தினமும் காலையில் மிளகுத் தூள் கலந்த வெந்நீரைக் குடிப்பதால், உடலின் வளர்சிதை மாற்றம் (Gain metabolism) மேம்படும். நமது சுவாசம், உயிரணுக்கள் மேம்படுவது, உணவை செரிமானம் செய்வது என நமது உடலுறுப்புகள் இயல்பாக செயல்பட செய்வது மெடபாலிசம். நமது உடலில் தொடர்ந்து நடைபெறும் அனைத்து விதமான ரசாயன செயல்முறைகளுக்கும் வளர்சிதை மாற்றம் முக்கியமானது. 


மிளகு கலந்த வெந்நீரை குடிக்கும்போது உடல் திறன் அதிகரித்து, உள்ளுறுப்புகள் சீராக இயங்குவதோடு, வலிமையாகவும் இருக்கும். வெந்நீருடன் மிளகுத் தூள் கலந்து குடித்து வருவதை தொடர்ந்து செய்துவந்தால், குடலின் இயக்கம் மேம்பட்டு, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும். இதனால், மலச்சிக்கல் மற்றும் மூலம் (piles)போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.  


வெந்நீரில் மிளகுத் தூளைக் கலந்து தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரியும். கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறையும்.
அதிகாலையில் மிளகுத் தூள் கலந்த வெந்நீரில் சேர்ந்து பருகினால், சருமத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அதோடு, சருமத்தில் எண்ணெய் பசை வெளியாவது குறையும். 
தொடர்ந்து வெந்நீருடன் கலந்து மிளகுத்தூள் குடித்து வருவதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.


Also Read | உச்சகட்டத்தில் டெல்லியின் காற்று மாசுபாடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR