குளிர்காலத்தில் பொதுவாக உடல் எடை அதிகரிக்கும். உடல் பருமனை கட்டுப்படுத்துவம், இருக்கும் எடையை பராமரிப்பதும் சற்று சிக்கலான சவால்தான். பருமனை குறைக்க நெல்லிக்காயும் ஒரு சிறந்த பங்காற்றுகிறது என்பது தெரியுமா?
எடையை குறைக்கும் நெல்லிக்காயின் அம்சம்: குளிர்காலத்தில், பொதுவாக பலருக்கும் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, குளிர்காலத்தில் அதிகம் சாப்பிடுவது, அடுத்தது, உடற்பயிற்சி குறைவது.
அத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் உடல் எடை மிகவும் அதிகரிக்கிறது. ஆனால், கவலையில்லாமல் உங்கள் எடையைக் குறைக்க உதவும் ஒரு அருமையான செய்தி இது.
நெல்லிகாயில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் உங்கள் எடையைக் குறைக்கும். நெல்லிக்காய் டீ தயாரிப்பதும் சுலபம் தான். முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 1 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் சிறிது இஞ்சியை நசுக்கி சேர்க்கவும். அத்துடன் சிறிதளவு புதினா இலைகளையும் சேர்க்கவும். 2 நிமிடம் கொதித்த பிறகு, அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கிவிடவும். இந்தக் கலவையை வடித்துக் குடித்தால், உடல் எடையும் வடியத் தொடங்கும்.
Also Read | துவாதசியன்று அகத்திக்கீரை நெல்லிக்காய் சாப்பிடுவதன் காரணம் தெரியுமா?
நெல்லிக்காய், அசிடிட்டி பிரச்சனையை நீக்கும் என்பது தெரியும். நெல்லிக்காயை தேநீராக செய்து குடிப்பதால் அசிடிட்டி பிரச்சனை நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காயை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். பச்சையாக நெல்லிக்காயை சாப்பிட பிடிக்காதவர்கள், இப்படி தேநீராக செய்து குடிக்கலாம். இரத்த சோகையை எதிர்த்து, ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும் நெல்லிக்காயை டீயாக செய்து குடிக்கலாம்.
கண்களுக்கு நன்மை செய்யும் நெல்லிக்காய், சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் பிரச்சனைக்கும் தீர்வு கொடுக்கிறது. நெல்லிக்காயை தேநீராக செய்துடீ குடிப்பதால் கற்கள் கரையும். அதுமட்டுமல்ல, கண்களுக்கு அமிர்தம் போன்ற நெல்லிக்காய், பார்வைத் திறனை மேம்படுத்துகிறது.
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் அருமருந்தாக பயனளிக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கவும், சரும நலன், கூந்தல் பாதுகாப்பு என ஆரோக்கியத்தை அளிக்கும் நெல்லிக்காய், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நெல்லிக்காயை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம், சாறு எடுத்து ஜூஸாகவும் குகடிக்கலாம். தூள் வடிவில், சர்க்கரை நீரில் ஊறவைத்து மொரப்பாவாக அல்லது ஊறுகாயாக, சாப்பிடலாம். அதேபோல் நெல்லிக்காயை பச்சடி செய்தும், நெல்லிக்காய் சாதம் செய்தும் சாப்பிடலாம்.
READ ALSO | நெல்லிக்காய் சாதம், நெல்லிப் பச்சடி செய்வது சுலபம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR