யோகா  நம்மை ஆரோக்கியமாக வைத்திர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு தொடர்ந்து யோகா செய்வதால் மன அமைதியும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். யோகா உடலை வலுவாகவும், பிட்டாகவும் மாற்ற உதவுகிறது. அந்த வகையில், தொப்பையை குறைக்கும் உத்தான பதாசனத்தின் பலன்களை அறிந்து கொள்ளல்லாம். இந்த ஆசனம், ​​தொப்பை  குறைக்க பெரிதும்  உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தன்பதாசனம் செய்யும் முறை


1. முதலில் சமதளமான இடத்தில் படுத்துக் கொள்ளுங்கள்


2. இப்போது இரண்டு கால்களையும் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்


3. அதன் பிறகு மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு காலை மேலூ தூக்கவும் 


4. காலை 30 டிகிரி வரை உயர்த்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்


5. இப்போது இப்படியே சிறிது நேரம் காலை வைத்து மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும்.


6. 30 வினாடிகளுக்குப் பிறகு, ஆழமாக மூச்சை வெளியேற்றிக் கொண்டே, ​​கால்களை மீண்டும் கீழே கொண்டு வாருங்கள்


7. பின்னர் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் இந்த ஆசனத்தை முயல வேண்டும். 


கொஞ்சம்  கொஞ்சமாக அதிக நேரம் பாதங்களை உயரத் தூக்கி வைக்கப் பழகலாம். இந்த ஆசனம் செய்வது உண்மையில் கடினமான இருக்கும். நன்கு செங்குத்தாக 90 டிகிரி கோணத்தில் தூக்குவது எளிது. ஆனால், அவ்வாறு தூக்காமல் தரையிலிருந்து 30 டிகிரி கோணத்தில், அதாவது ஒன்றரை அடிக்கு மேல் தூக்கி, அதே நிலையில் சில நொடிகள் வைத்திருப்பதும் எளிதல்ல.  அவ்வாறு செய்யும் போது அடி வயிற்றில் நடுக்கம் போல் உணரலாம்.


மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கும் ‘செரடோனின்’ ஹார்மோனை அதிகரிக்க செய்யும் சில உணவுகள்!


உத்தான பாதாசனத்தின் பலன்கள்


இந்த ஆசனம் செய்வதன் மூலம் தொப்பை குறையும். அதனை தொடர்ந்து பயிற்சி  செய்வது வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தொப்புளை சமநிலைப்படுத்துவதில் இந்த ஆசனம் மிகவும் முக்கியமானது. மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. இந்த ஆசனத்தின் மூலம் முதுகுவலியும் நீங்கும்.


உத்தான பதாசனம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்


இந்த ஆசனத்தை எப்போதும் வெறும் வயிற்றில் செய்யுங்கள். முதுகு வலி இருந்தால் இதை ஒருபோதும் செய்யாதீர்கள். வயிற்று அறுவை சிகிச்சை செய்தாலும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.


(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை கடைபிடிக்கும் முன் நிபுணர்களீடம் ஆலோசனை செய்யவும்)


மேலும் படிக்க | எந்த கலர் திராட்சை கொலஸ்டாராலை கட்டுப்படுத்தும்? திராட்சைப்பழ ரகசியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ