சர்க்கரைவள்ளிக்கிழங்கு: சுவை மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளையும் இது அள்ளித்தருகிறது
Health Benefits of Sweet Potato: சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் சுவை சற்று இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கும்.
Health Benefits of Sweet Potato: சர்க்கரைவள்ளிக்கிழங்கு இந்த பருவநிலையில் கிடைக்கும் ஒரு முக்கியமான, வித்தியாசமான வேர் காயாகும். இது ஒரு குளிர்கால சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. சிலர் இதை ஸ்வீட் பொடேடோ என்றும் அழைக்கிறார்கள். ஆனால் இது சாதாரண உருளைக்கிழங்கை விட மிகவும் ஆரோக்கியமானது.
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் சுவை சற்று இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆரஞ்சு, பழுப்பு மற்றும் ஊதா உட்பட பல வண்ணங்களில் வருகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் நன்மை கிடைக்கும். அதை பற்றி இங்கே காணலாம்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு உட்கொள்வதால் இந்த நோய்களைத் தடுக்கலாம்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, பருவகால நோய்களால் நாம் உடனடியாக பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் இதை தினமும் உட்கொண்டால் நன்மை பயக்கும்.
புற்றுநோய்
பீட்டா கரோட்டின் எனப்படும் ஏஜெண்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகம் காணப்படுகின்றன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.
இதய ஆரோக்கியம்
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை குறைக்கலாம்.
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் சாறுகள்: கண்டிப்பா குடிங்க
சர்க்கரை நோய்
சர்க்கரைவள்ளிக்கிழங்கின் சுவை இனிப்பாக இருந்தாலும், இதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த இனிப்பு விருப்பமாக பார்க்கப்படுகின்றது.
எடை மேலாண்மை
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. இது வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவான உணர்வுடன் வைத்திருக்கிறது. இதன் மூலம், அதிகமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவை உண்ணும் உட்கொள்ளும் ஆசை அகல்கிறது. இது உடல் பருமன் அதிகமாக உள்ள நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்லை எப்படி உட்கொள்ள வேண்டும்?
சர்க்கரைவள்ளிக்கிழஙங்கை வேகவைத்து சாப்பிடலாம். அல்லது இதை கறியாக சமைத்தும் உட்கொள்ளலாம். தீயில் சுட்டும் இதை சாப்பிடலாம். சுட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கு குளிர்காலத்தில் மிகவும் சுவையாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முள்ளங்கி சாப்பிட்டால் வாயு நீங்கும், பிபி குறையும், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ