கோடையில்... சுகர் லெவலை குறைக்க உதவும் சூப்பர் காய்கறிகள் இவை தான்..!!
Vegetables For Diabetes Control in Summer: நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான உடல்நல பிரச்சனை. இந்நிலையில், வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் சுகர் அளவு கட்டுக்குள் இருக்க நாம் உணவில் சேர்க்க வேண்டியவை குறித்து அறிந்து கொள்ளலாம்.
Vegetables For Diabetes Control in Summer: நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான உடல்நல பிரச்சனை. உயர் இரத்த சர்க்கரை என்பது பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்த நோயை குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். முறையான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மூலம் மருந்துகளின்றி நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்நிலையில், வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் சுகர் அளவு கட்டுக்குள் இருக்க நாம் உணவில் சேர்க்க வேண்டியவை குறித்து அறிந்து கொள்ளலாம்.
உங்கள் அன்றாட வழக்கத்திலும், உணவிலும் சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்தால், சர்க்கரை அளவை கட்டுக்குள் (Diabetes Diet) வைக்கலாம். நீரிழிவு நோயாளிகளின் உணவுப் பழக்கம் வரும்போது, பருவ காலத்தை மனதில் கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் உணவுமுறை மட்டுமல்ல, சர்க்கரை நோயாளிக்கு வானிலையின் தாக்கமும் இருக்கும் என்பது தான். நீங்களும் நீரிழிவு நோயாளியாக இருந்தால், சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க இந்த 5 உணவுகளை உங்கள் கோடைகால உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றின் மூலம் உங்கள் சர்க்கரை நோய் எந்த மருந்தும் இல்லாமல் கட்டுக்குள் இருக்கும். கோடையில் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக செயல்படும் அந்த 5 உணவுகள் எவை என்று தெரிந்து கொள்வோம்...
சுரைக்காய்
பச்சை காய்கறிகளில் சுரைக்காய், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இதில் ஏராளமாக உள்ளன. இந்த காய்கறியை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காய்கறியில் கார்போஹைட்ரேட் அளவும் மிக குறைவு. மேலும் குறைந்த அளவி கலோரிகள் உள்ளன. இது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க குறைந்த கலோரி கொண்ட உணவுகள் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது
தக்காளி
சர்க்கரை நோயாளிகளுக்கு தக்காளி மிகவும் பயனுள்ள காய்கறிகளில் ஒன்றாகும். லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதில் உள்ளதால், உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இதனால் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள காய்கறிகளில் தக்காளியும் ஒன்று. இதை காய்கறிகளுடன் சேர்த்து சாலட் வடிவிலும் சாப்பிடலாம். கோடையில் தக்காளியை உட்கொள்வது, உடலுக்கு நீர் சத்தை அளிப்பதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?
பீன்ஸ்
பீன்ஸில் குறைவான கார்போஹைட்ரேட்டுகளுடன் குறைந்த கலோரிகள் உள்ளன. ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து இதில் ஏராளமாக உள்ள பீன்ஸ் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, கோடை காலத்தில் சோர்வு ஏற்படாமல் ஆற்றலையும் அள்ளி வழங்குகிறது.
வெள்ளரி
கோடை காலத்திற்கு ஏற்ற அற்புத காய்கறியான வெள்ளரியை சாலட் வடிவில் சாப்பிடுவது அமிர்தம் போன்றது. இதில் 90 சதவீதம் நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதனுடன், இதில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறையை சீராக வைக்கிறது. இது இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்துகிறது, இது இரத்த சர்க்கரையை சாதாரணமாக வைத்திருக்கிறது.
கீரை
இரும்பு சத்து முதல் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் கொண்ட கீரையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவும் மிக குறைவு. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து. அதிலும் வெந்தய கீரை மிகவும் நன்மை பயக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டுமல்லாது உடல் எடையை குறைக்கவும் கீரை உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ