Vitamin A Deficiency: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித வைட்டமின்கள் உதவுகின்றன. அவற்றில் வைட்டமின் ஏ -வும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வைட்டமின் ஏ உடல் ஆரோக்கியத்தோடு மட்டுமல்லாமல், கூந்தல் மற்றும் சருமத்திற்கும் பல வித நன்மைகளை அளிக்கின்றது. உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால், அது பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் ஏ குறைபாடு


வைட்டமின் ஏ குறைபாடு உடலில் பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது. இதனால் கண்களில் வறட்சி, அரிப்பு, தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் மிகக் கடுமையான நோய்களில் ஒன்று மாலைக்கண் நோய். இதன் காரணமாக குறைந்த வெளிச்சத்தில் பார்ப்பது கடினமாகிறது. மேலும் இரவில் கண் தெரிவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது நிரந்தர குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.


இந்த பிரச்சனை பெரியவர்களை விட குழந்தைகளை அதிகமாக பாதிக்கின்றது. வைட்டமின் ஏ குறைபாட்டைத் தடுக்க, வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளுடன் சமச்சீர் உணவை உட்கொள்வது அவசியம். வைட்டமின் ஏ முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற உணவுகளில் அதிகம் உள்ளது. இது தவிர, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை மற்றும் பச்சை இலை காய்கறிகள் சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால் ஏற்படும் நோய்கள்


தோல் வறட்சி


உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால், உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, அதன் விளைவு தோல் மற்றும் கூந்தலிலும் காணப்படுகிறது. தோல் செல்களை உருவாக்குவதில் வைட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கிறது. இது தோல் அழற்சியை குறைக்கும் வேலையை செய்கிறது. இதன் குறைபாடு அரிக்கும் தோலழற்சி மற்றும் தோல் தொடர்பான இன்னும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக, சருமத்தில் வறட்சி அதிகரிக்கிறது. மேலும் உதடுகளில் வெடிப்பும் ஏற்படலாம்.


கண்கள்


வைட்டமின் ஏ (Vitamin A) குறைபாடு இருந்தால், அதன் காரணமாக கண்களில் கடுமையான விளைவுகள் ஏற்படுகின்றன. உடலில் போதுமான அளவு வைட்டமின் ஏ இல்லாமல் போனால், கண் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் ஏற்படும் கண் பிரச்சனைகளைத் தவிர்க்க, வைட்டமின் ஏ நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.


மாலைக்கண் நோய்


வைட்டமின் ஏ குறைபாட்டால் மாலைக்கண் நோய் (Night Blindness) ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பகலை விட இரவில் பார்வை குறைவாக இருக்கும். இதன் காரணமாக, கண்களின் கார்னியா வறண்டு, பார்வை மங்கலாகும். இது நிரந்தர குருட்டுத்தன்மைக்கான வாய்ப்புகளையும் கணிசமாக அதிகரிக்கும்.


மேலும் படிக்க | ஆண்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்வதில்லை... ICMR கொடுத்த அதிர்ச்சி ரிபோர்ட்


குழந்தைகள்


வைட்டமின் ஏ குறைபாடு குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் வளரும் பருவத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் அளிக்க வேண்டும். இது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.


கர்ப்ப காலத்தில் பிரச்சனை


வைட்டமின் ஏ குறைபாட்டால் கருத்தரிப்பதில் சிக்கல்களும் ஏற்படலாம். இதன் காரணமாக, ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆகையால் குழந்தைக்காக முயற்சிப்பவர்கள் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.


வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறிகள்


- உலர்ந்த சருமம்
- அவ்வப்போது தொற்றுகளால் பாதிக்கப்படுவது.
- மெதுவான வளர்ச்சி
- கருத்தரிப்பதில் பிரச்சனை
- நோயெதிர்ப்பு செயல்பாடு குறைவாக இருப்பது


வைட்டமின் ஏ குறைபாட்டைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?


- வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- சோயாபீன்ஸ், கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பச்சை இலைக் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், மீன் எண்ணெய், முட்டை ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. 
- தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
- அவ்வபோது வைட்டமின் ஏ பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.


மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை தரும்... மருத்துவமனைகளை கண்டறிவது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ