கொரோனாவால் பாதிக்கப்படும் வாசனை உணர் திறனை விட்டமின் A மீட்டெடுக்குமா..!!
வாசனையை உணரும் திறன் பாதிக்கப்படுவதை, மருத்துவத்தில் அனோஸ்மியா (Anosmia) என்று அழைக்கின்றனர்.
வாசனையை உணரும் திறன் பாதிக்கப்படுவதை, மருத்துவத்தில் அனோஸ்மியா (Anosmia) என்று அழைக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு வாசனை, ருசி அறியும் திறன் பாதிக்கப்படுகிறது. எனினும் குணமடைந்த சில நாட்களில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகின்றனர். ஆனால், சிலருக்கு அது நிரந்தர பிரச்னையாகவும் மாற வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கோவிட் நோய்த் தொற்றுக்குப் பிறகு வாசனை உணர்வை இழந்தவர்கள் வைட்டமின் ஏ சொட்டு மருந்தை பயன்படுத்தினால், வாசனை ருசி அறியும் உணர்வை திரும்ப என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் ஒரு குழு இது தொடர்பாக 12 வாரங்கள் பரிசோதனை நடத்தியது. வாசனை உணர்வை இழந்த மக்களுக்கு விட்டமின் ஏ ஊட்டச்சத்து கொண்ட நாசி சொட்டு மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
கொரோனா வைரஸ்களால் சேதமடைந்த மூக்கின் திசுக்களை சரிசெய்ய இந்த சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஜூன் மாதத்தில், பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பேர்க் (Strasbourg) பல்கலைக்கழக மருத்துவமனைகளின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கோவிட் -19 தொடர்பான அனோஸ்மியா பிரச்சனை சரியாக ஒரு வருடம் ஆகலாம் என்பதைக் காட்டுகிறது.
ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்
வைட்டமின் A உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீஸ், முட்டை, மீன் எண்ணெய் ஆகியவற்றில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது.
ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR