மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு  பலருக்கு லேசான நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளது. அது செரிமானம் அல்லது எடை இழப்புக்கு உதவுகிறது என்று நம்பப்படுகிறது. இது குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வதால், பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என நிபுணர்கள் உறுதியாக கூறுகின்றனர். 


சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் 6 நன்மைகளை குறித்து நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்


1. குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படும்


ஒருவர் உணவு உண்ட பிறகு நடந்தால், அவரது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.


2. உடல் பருமன் குறையும்


உடலில் அதிகப்படியான கொழுப்பு அல்லது உடல் பருமனால் சிரமப்படுபவர்கள், உணவு சாப்பிட்டு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் நடந்தால்,  மூலம் உடலில் உள்ள தொப்பையை குறைக்கலாம்.


மேலும் படிக்க |  சிறுநீரக நோய் வராமல் தடுக்கும் இந்த உணவுகளை அவசியம் டயட்டில் சேர்க்கவும்


3. தூக்கமின்மையிலிருந்து நிவாரணம்


தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள், உணவு உண்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால், தூக்கத்தின் தரம் மேம்படும், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம் .


4. மனநலம் சிறப்பாக இருக்கும்


சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனநலம் பேணப்படும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.


5. செரிமானம் சரியாகும்


உணவு உண்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், இதைச் செய்வதன் மூலம் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக மாற்ற முடியும் என்று கூறுகிறார்கள். இது தவிர, மலம் கழிப்பதும் எளிதாக இருக்கும்.


மேலும் படிக்க |  Health Alert: பலாப்பழம் உண்ட பின் சாப்பிடக் கூடாத சில உணவுகள்


6. ஆற்றல் கிடைக்கும்


உணவு உண்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு அதிக ஆற்றலை அளிக்கும். மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR