கண்களுக்கு ஆரோக்கியம் வேண்டுமா?... இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
கண்களுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மனிதனுக்கு கண்கள் மிக மிக அவசியம். அழகை ரசிப்பதற்கும், தொந்தரவு இல்லாமல் வாழ்வதற்கும் என கண்கள் பல வகையில் மனிதர்களுக்கு அவசியமானது. அந்த கண்கள் மீதான அக்கற்றையை கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பலர் தங்களது கண்கள் குறித்த ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் 100 வயதானாலும் தெளிவாக கண்கள் தெரிந்த மனித சமூகம் போய் தற்போது 20 வயதிலேயே கண்கள் சரியாக தெரியாமல் கண்ணாடி அணிபவர்கள் அதிகம் இருக்கின்றனர். கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் பின்வருமாறு:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஒருவரின் கண்பார்வை குறைபாடுகளை சரி செய்ய மற்றும் மேம்படுத்துவதற்கு உணவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம்.
கீரைகள்:
கீரையில் கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்க்கும்போது கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும்.
கேரட்:
பொதுவாக வைட்டமின் ஏ குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடுகள் அதிகளவில் ஏற்படும். எனவே கண்களுக்கு ஆரோக்கியமளிக்கும் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள கேரட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகளவில் சாப்பிடலாம்.
மாதுளம்பழம்:
மாதுளை மிகச்சிறந்த உணவுப்பொருளாக உள்ளது. அன்றாடம் ஒருவரின் உணவில் மாதுளை மற்றும் அதன் பூக்களை சாப்பிடும் போது கண்பார்வை மேம்படுத்த உதவியாக உள்ளது.
மாம்பழம் மற்றும் பப்பாளி:
மாம்பழம் மற்றும் பப்பாளியில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுப்பொருள்களில் ஒன்றாக உள்ளது.
செர்ரிகள்:
செர்ரிகளில் உடலில் கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு தேவையான வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் செர்ரி பழங்களை அதிகளவில் உட்கொள்ளலாம். குறிப்பாக வைட்டமின் சி சத்துக்கள் கண்புரையைத் தடுக்கும் என்றும் பல ஆய்வுகள் கூறுகிறது.
இவைகள் மட்டுமின்றி தர்பூசணி, சிட்ரஸ் பழங்கள், பாதாம் பருப்பு, நெல்லிக்காய், எலுமிச்சை, மீன்கள், பயறு வகைகள், அதிக நீர் அருந்துதல் போன்றவற்றை மறக்காமல் உணவு முறையில் பின்பற்றினால் கண்களின் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ