சிறுநீரகக்கல், ரத்த சோகையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்தப் பழம் சாப்பிடுங்கள்
ஒவ்வொரு பழமும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டல்லதைப் பலப்படுத்தி, தொற்று மற்றும் தீவிர நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.
காய்கறி மற்றும் பழங்களை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளும்போது, உடல்நலப் பிரச்சனைகளின்றி ஆரோக்கியமாக இருக்கலாம். ஒவ்வொரு பழமும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டல்லதைப் பலப்படுத்தி, தொற்று மற்றும் தீவிர நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. அந்தவகையில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பார்க்கலாம்.
சிறுநீரகக்கல்
கால்சியம் படிகங்கள் சிறுநீரக பாதையில் படிவதால் சிறுநீரக கற்கள் உருவாகின்றன. இதனை தடுக்கும் ஆற்றல் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மற்றும் சிட்ரேட்டுகளுக்கு உண்டு. ஒரு கப் ஆரஞ்சில் 4.3 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. அதனால், இது செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. தயமின், ரிபோஃபிளேவின் (riboflavin), நியாசின், வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்டவை ஆரஞ்சு பழத்தில் இருக்கின்றன. பொதுவாக சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கொண்ட நோயாளிகளுக்கு ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க மருந்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
ரத்தசோகை
இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை ஏற்படுகிறது. ஆரஞ்சு பழத்தில் இரும்பு சத்து இல்லாவிட்டாலும், அவற்றில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் செரிமான செயல்பாட்டின்போது இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து உட்கொண்டால் இரத்த சோகையை உருவாவது தடுக்கப்படும். நரம்புக் குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. தொண்டை புண்ணால் அவதியடைந்து வருபவர்கள் ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொண்டால் விரைவாக அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம். வாய், பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
இதய பாதுகாப்பு
இன்றைய சூழலில் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கவழக்கம், ஆரோக்கியமற்ற உணவுகள். நோய்களுக்கு வயது வித்தியாசமெல்லாம் கிடையாது. யாருக்கும் என்ன நோய்கள் வேண்டுமானாலும் வரலாம் என்பதால், நாம் எப்போதும் விழிப்புடன் இருப்பது நல்லது. அந்தவகையில், ஆரஞ்சு பழத்தில் இருக்கும் பிளவனாய்டுகள், இதயத்தில் உருவாகும் ஹெஸ்பெரிடின் கொழுப்பைக் குறைத்து ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால், மாரடைப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
ALSO READ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR