எந்தவொரு உடல் பிரச்சனைக்காக மருத்துவரிடம் சென்றாலும், முதலில் அவர் நாக்கை நீட்டச் சொல்லி பார்ப்பார். அதற்கு காரணம் என்ன தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் ஏற்படும் மாற்றங்களை முதலில் வெளிப்படுத்துவது நாக்கு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, ஆரோக்கியத்தின் அளவீட்டை நாக்கைப் பார்த்தே தெரிந்துக் கொள்ளலாம்.


நாக்கின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான நோய் இருக்கிறது என்பதை கணிக்க முடியும் என்று சொல்கிறார்கள். இது நாக்கு ஜோசியம் அல்ல, ஆரோக்கியத்தை அளவிடும் அளவுகோல்.


நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக பொருள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை, வெளிர் வெண்ணிறம், காபி நிறம், நீல நிறம், என நாக்கு பலவித வண்ணங்களில் மாறும்.


READ ALSO | நிலக்கடலைக்கும் இனப்பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பு தெரியுமா?


நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்று சொல்வதெல்லாம் வெற்றுப் பழமொழிகள். நரம்பு இல்லாமல் இருப்பதால் நாக்கு சுலபமாக வளையும். ஆனால், நாக்கில் நரம்பு இல்லாததற்கும், அதன் நிற மாறுபாட்டிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.  


உங்கள் நாக்கு எந்த நிறத்தில் இருக்கிறது? 


அடர் சிவப்பு நிற நாக்கு
அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்று சொல்வார்கள்.
 
மஞ்சள் நிற நாக்கு 
மஞ்சள் நிறத்தில் நாக்கு இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் ஏற்பட்டிருக்கலாம் என்பதை குறிக்கும்.   


இளம் சிவப்பு நிறம் 
நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் பாதிப்பைக் குறிக்கிறது.


ALSO READ | பிரசவ தழுப்புகளை நீக்கும் வீட்டு வைத்தியங்கள்


வெண்ணிற நாக்கு 
உங்கள் நாக்கு வெளிறிப் போய், வெண்ணிறத்தில் இருந்தால், உடலில் நீர் சத்து குறைபாடு இருப்பதாக கருத வாய்ப்பு உண்டு. அதுமட்டுமல்ல, நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்தாலும், நாக்கு வெளுத்துப் போகும்.  


காபி நிறம்  
காபி குடித்தவுடன், அதன் நிறம் நாக்கில் படிந்திருப்பதைப் பார்த்து உங்கள் நாக்குக் காபி நிறம் என்று நினைக்கவேண்டாம். சாதாரணமாக பார்க்கும்போது, நாக்கின் நிறம் காபி நிறத்தில் இருந்தால், அது நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை குறிக்கலாம். 


நாக்கின் நிறம் கருப்புக்கும் வெளுப்புக்கும் இடையில் சிமெண்ட் நிறத்தில் இருந்தால், செரிமானம் மற்றும் மூலநோய் இருப்பதற்கான அறிகுறியாய் இருக்கலாம்.


READ ALSO | கத்திரிக்காய் நன்மைகளை மட்டுமல்ல, தீமைகளையும் செய்கிறது தெரியுமா?


நீல நிற நாக்கு  
நாக்கின் நிறம் நீலமாக இருந்தால், சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதற்கான எச்சரிக்கை மணியாக அது இருக்கலாம்.  


அதேபோல, நாக்கில் சிறிய சிறிய குமிழ்கள் போல தென்பாட்டால், நீரிழிவு தொடர்பான சிக்கல்கள் தொடங்குவதாக புரிந்துக் கொள்ளலாம்.


நாக்கின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான நோய் இருக்கிறது என்பதை கணிக்க முடியும்


Also Read | Corona Vaccine: கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க ரோபோட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR