தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மூச்சு வாங்குவது போல், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நம் உடலின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீரான வளர்சிதை மாற்றம், ஒளிரும் சருமம் மற்றும் நன்கு செயல்படும் சிறுநீர் அமைப்பு ஆகியவற்றிற்கு வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது உட்கொள்வது அவசியம் என்று எப்போதும் போதிக்கப்படுகிறது. கோவிட்-19 (Covid-19) தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, வெதுவெதுப்பான நீரை அருந்துவது, கிட்டத்தட்ட அனைத்து குடும்பம்களிலும் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. 


வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் பல நன்மைகள் உள்ள போதிலும், போதிய எச்சரிக்கை இல்லாமல், இதை நாம் அளவுக்கு அதிகமான எடுத்துக்கொண்டால், இதனால் உடலில் பல வித எதிர்மறையான தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 


சிறுநீரகத்தின் நண்பனா? எதிரியா? 


அதிகப்படியான வெதுவெதுப்பான நீர் சிறுநீரகத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அது உண்மை!! அதிக அளவு வெதுவெதுப்பான நீர் அவற்றின் செயல்பாட்டைத் தடுக்கிறது. நமது சிறுநீரகங்கள் நச்சுகளை வெளியேற்ற உதவுவதால், நமது சிறுநீர் அமைப்புக்கு தண்ணீர் (Water) இருப்பது முற்றிலும் அவசியம் என்றாலும், அதிகப்படியான சூடு அல்லாமல் சாதாரண தண்ணீரை அவ்வப்போதும், வெதுவெதுப்பான நீரை இடைவெளி விட்டும் அருந்துவது நல்லது. இதன் மூலம் உங்கள் சிறுநீரகத்துக்கு நண்பனாக இருக்கும் நீர் எதிரியாக மாறாமல் பார்த்துக்கொள்ளலாம். 


இரத்த அழுத்தத்தை பாதிக்கிறது


வெதுவெதுப்பான நீரை அதிகம் குடிப்பது உடலின் இரத்த அளவை அதிகரிக்க வழிவகுக்கும். இது இரத்த ஓட்டம் மற்றும் அழுத்தத்தில் அடிகப்படியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 


ALSO READ | வெள்ளை முடியை கருமையாக்க இந்த இலையை பயன்படுத்துங்க 


செரிமான பிரச்சனைகள்


வயிறு சூடாக இருப்பது உடல் நலனுக்கு நல்லதல்ல என நாம் அறிவோம். வெதுவெதுப்பான நீரை ஏராளமாக அருந்துவது உணவை ஜீரணிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில் அது உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. மேலும் செரிமான பிரச்சினைகளை தூண்டிவிடுகிறது. 


அதிக அசுத்தங்களின் இருப்பிடம் 


இந்த நாட்களில் நீரின் தரம் ஒரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. குறிப்பாக, நீர் சூடாக இருக்கும்போது, ​​அது மாசுபடுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகரித்து விடுகின்றன. ஏனெனில், குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீர் அசுத்தங்கள் மற்றும் நச்சுகளை எளிதில் கரைக்கிறது. இதனால், இதில் மாசுபாட்டின் அளவும் அதிகரிக்கிறது. சூடான அல்லது வெதுவெதுப்பான நீரை (Warm Water) நாம் அதிகம் உட்கொள்ளும் போது, நம் உடலுக்குள் செல்லும் மாசுபாட்டின் அளவும் அதிகரிக்கின்றது. 


ALSO READ | கொய்யாவில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..! மாத்திரைக்கு NO சொல்லுங்க..! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR