கோவிட்-19: கொரோனா தொற்று உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. சற்றே குறைந்திருந்த தொற்று எண்ணிக்கை இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மிகவும் அவசியமான வேலை இல்லாத பட்சத்தில், யாரும் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
எனினும், வீட்டில் இருக்கும்போதும், நாம் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வீட்டிற்குள் இருக்கும் நாற்காலிகள், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றை அவ்வப்போது சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒருவேளை உங்கள் வீட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர் இருந்தால், சில விஷயங்களில் தீவிர கவனம் தேவைப்படும். கோவிட் 19 (Covid 19) தொற்றுநோயானது நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு, கை பிடிப்பது, நோயாளி வெளிவிடும் சுவாசக்காற்றை நாம் சுவாசிப்பது போன்றவற்றால் மட்டும் பரவாது. முக்கியமாக, மேஜை, நாற்காலிகள், கழிப்பறைகள் ஆகியவையும் இவை பரவ பெரிய அளவில் உதவி செய்கின்றன.
ALSO READ | பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை!
கழிப்பறையின் தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்:
பல வீடுகளில் பல அறைகள் இருந்தாலும், பெரும்பாலும் கழிப்பறைகள் பொதுவானவையாக இருக்கும். அறிகுறி இல்லாத கொரோனா நோயாளி (Corona Patients) உங்கள் வீட்டில் இருந்தால், ஒவ்வொரு முறை அவர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகும், கழிப்பறையை முழுமையாக, நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் கோவிட்-19 வைரஸ் கழிப்பறையில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
டிவி ரிமோட், டோர் ஹேண்டில் போன்றவற்றில் கொரோனா வைரஸ் இருக்கலாம்:
டிவி ரிமோட், டோர் ஹேண்டில் மற்றும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் பொதுவான பகுதிகள், பலர் தொட்டு பயன்படுத்தும் வீட்டில் உள்ள பொருட்கள் ஆகியவை உங்களுக்கு பிரச்சனயாக அமையலாம். இவற்றின் மூலம் தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் இந்த பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். வெளியில் சென்று வந்த பிறகு, உங்கள் மொபைலையும் சுத்தப்படுத்த வேண்டும்.
கதவு, பூட்டு பராமரிப்பு:
வீட்டின் பூட்டைத் திறக்கும்போது அல்லது கதவு கைப்பிடியைப் பயன்படுத்தும் போது, அவற்றை நீங்கள் சுத்தப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த தொற்று காலத்தில் (Pandemic)எந்த ஒரு அஜாக்கிரதையும் ஆபத்தாக முடியலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை. இவற்றை பரிந்துரைகளாக மட்டுமே எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.)
ALSO READ | Corona: கொரோனாவுக்கும் ஒமிக்ரானுக்கும் தொடர்பு இல்லை! இது வேறொரு தொற்று!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR