உயர் இரத்த சர்க்கரை அறிகுறிகள்: இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. பெரும்பாலும் இது நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையின் காரணமாக உருவாகிறது. நீரிழிவு நோய் வருவதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதலாவது நமது வாழ்க்கை முறை, இரண்டாவது நமது மரபணு. ஒரு நீரிழிவு நோயாளி தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவ்வாறு செய்யாவிட்டால், உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், அது ஹைப்பர் கிளைசீமியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இந்த நிலை முற்றினால், அது மாரடைப்பை ஏற்படுத்தலாம். மாரடைப்பு உயிர் இழப்புக்கும் காரணமாகலாம். 


உயர் இரத்த சர்க்கரை அறிகுறிகள்


இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​​​அது சில சிறப்பு அறிகுறிகளைக் கொடுக்கத் தொடங்குவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், தொண்டையில் அதிக வறட்சி காணப்படுகின்றது. மீண்டும் மீண்டும் அதிக தாகம் எடுக்கிறது. இதனுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படுகின்றது. 


தோல் தொற்று, மங்கலான பார்வை, சிறுநீர்ப்பை தொற்று, திடீர் எடை இழப்பு, இவை அனைத்தும் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதைக் குறிக்கும் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று, பரிசோதனை செய்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும். 


மேலும் படிக்க | மலச்சிக்கலில் இருந்து நிரந்தர தீர்வு பெற வெறும் 10 ரூபாய் இருந்தால் போதும் 


நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான காரணங்கள்


உயர் இரத்த சர்க்கரை அறிகுறிகள் யாருக்கு தென்பட்டாலும் அவை ஆபத்தானவைதான் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால், அவற்றை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது நல்லது. உடலில் நீர்ச்சத்து குறைதல், உடற்பயிற்சியின்மை, அதிக உணவு உண்பது, மன உளைச்சல், சர்க்கரை நோய் அல்லது நாட்பட்ட நோய் தொடர்பான மருந்துகளை உட்கொள்ள மறப்பது போன்ற காரணங்களால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். ஆகையால், இவ்விஷயங்களில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.


இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த குறிப்புகள்


உடலில் இரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதைக் கண்டால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுவதில் தாமதம் காட்ட வேண்டாம். இதனுடன், நீரிழிவு கட்டுப்பாட்டு மருந்துகளை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள், தேவைப்படும்போது நீங்கள் அவற்றை பயன்படுத்தலாம். இரவில் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உங்கள் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சிறிய உடனடி நடவடிக்கைகள் மூலம், சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் சில அபாயங்களிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.


(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ